படத்தின் நாயகனாக நடிக்கும் ருத்ரன் மிஷ்கினிடம் உதவி இயக்குனரான இருக்கிறார். அவரது கதையை நடிகராவே வரும் விஷ்ணு விஷாலில்டம் சொல்ல போகும்போது, அவருக்கு திருதி இல்லாமல் போகவே தன் வாழ்க்கையில் நடந்த நிஜ காதல் கதையை அவரிடம் சொல்கிறார்.
அப்படி அவர் காதலிக்கும் இரண்டு காதலைப்பற்றிய காட்சிகள் திரைப்படமாக அழகான காதல் கதையாக விரிகிறது. ஃபைவ் ஸ்டார் கிருஷ்ணாவாக சினிமாவில் அறிமுகமான கிருஷ்ணன் இயக்குனராக மாறி படத்தை எடுத்திருக்கிறார். படம் முழுவதும் இளமை கொண்ட்டாட்டமும். முத்தக்காட்சிகளும், காதலிகளின் சில்மிஷங்களும் ஜாலியாக நகர்கிறது.
அடிக்கடி ப்ரேக் அப் களை சந்திக்கும் ருத்ரனை நடிகராக வரும் விஷ்ணு விஷால் எப்படியாவது அவரை அவரது காதலியுடன் சேர்த்து வைத்துவிட திட்டமிடுகிறார். அப்படி அவர் எடுக்கும் முயற்சிகள் சுராஸ்யமாக இருக்கிறது. இளம் தலைமுறைகள் எப்படி காதல் தோல்விகளையும், உணர்வுபூர்வமான விஷயண்ங்களையும் லேசாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பதை காதலுக்கு இடையே சொல்லி புரிய வைத்திருப்பதில் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
ருத்ரா காதலியிடம் கோபம் கொள்வதிலும், ஏமாற்றம் அடையும் போதுமான உணர்வுகளை முதல் படத்திலேயே நிறைவாக வெளிப்படுத்தியிருக்கிறார். முகமும் இயல்பாக இருக்கிறது. அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு இடம் கிடைக்கும் என்று சொல்லலாம்.
நாயகிகளாக மிதிலா பால்கர், அஞ்சு குரியன் ஆகியோர் வருகிறார்கள். மிதிலா நக்கலுடன் ரசிக்க வைக்கிறார். அஞ்சு மனதைத் தொட்டு நடிகிறார். இயக்குனராக மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி வரும் இடங்கள் கலகலப்பு, கருணாகரன், கஸ்தூரி, கீதா கைலாசம் ஆகியோர் நிறைவு.
யூத் ஆடியன்ஸை மனதில் வைத்து கதையை எழுதியிருக்கிறார்கள் ஆர்.சி.பிரணவ் கிருஷ்ணகுமார் ராமகுமார். ஆனாலும் பல படங்களில் பார்த்த அதே காட்சிகளின் சாயம் தெரிகிறது. சம்மந்தமில்லாமல் அதீத கோபம் காட்டும் ருத்ரா நமக்கே கடுப்பேத்துகிறார். ஜென் மார்டின் இசையில் பாடல்கள் யுத்புல்லாக இருக்கிறது. ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கிறது.