வெளியுறவுத் துறை அமைச்சகம் (Ministry of External Affairs of India) ஆனது ஒட்டுமொத்த பழைய பாஸ்போர்ட் நடைமுறையையும் மாற்றும்படி சிப்-பேஸ்டு ஈ-பாஸ்போர்ட்களை (E-passports) அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இனிமேல் பழைய பாஸ்போர்ட்களின் கதை முடியப் போகுது என்றே சொல்ல வேண்டும். பயோமெட்ரிக் விவரங்கள் (Biometric Data), ஆர்எப்ஐடி டெக்னாலஜி (RFID Technology), பப்ளிக் கீ இன்பிராஸ்டிரக்சர் (Public Key Infrastructure) போன்றவற்றுடன் புதிய ஈ-பாஸ்போர்ட் கொடுக்கப்படுகிறது. இந்த ஈ-பாஸ்போர்ட்டின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, பாஸ்போர்ட் வழங்குதல் மற்றும் பயன்படுத்தலில் டிஜிட்டல் முறையை கொண்டு வருவதற்கு பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0-ஐ (Passport Seva Programme 2.0) கொண்டுவந்தது. இந்த திட்டத்தின்படி ஆர்எப்ஐடி சிப் (RFID Chip) பேஸ்டு ஈ-பாஸ்போர்ட் அமல் செய்யப்பட்டு இருக்கிறது.
அதாவது, பழைய பாஸ்போர்ட்களில் பேப்பர் டாகுமென்ட்களாக இருக்கும் டேட்டாக்கள் ஒட்டுமொத்தமாக டிஜிட்டலுக்கு மாற இருக்கிறது. இதன் மூலம் டிஜிட்டல் முறையிலேயே வெரிபிகேஷன் இருக்கும். இதனால், பாஸ்போர்ட் வெரிபிகேஷனுக்கு எடுத்து கொள்ளப்படும் நேரம் குறையும். அதே நேரத்தில் டிஜிட்டல் என்ஹான்ஸ்டு செக்யூரிட்டி உறுதி செய்யப்படும்.
ஈ-பாஸ்போர்ட் எப்படி வேலை செய்கிறது? இந்தியாவில் வழங்கப்படும் பாஸ்போர்ட்களில் என்னென்ன விவரங்கள் அடங்கி இருக்குமோ, அதை அப்படியே டிஜிட்டல்லாக மாற்றி அதை சிப் மூலம் பதிவு செய்து கொள்வதை இந்த ஈ-பாஸ்போர்ட் உறுதி செய்கிறது. இதற்காக ரேடியோ ஃபிரிகொன்சி ஐடென்டிஃபிகேஷன் (Radio Frequency Identification) டெக்னாலஜி அடங்கி சிப் பொருத்தப்படுகிறது.
இந்த ரேடியோ ஃபிரிகொன்சி ஐடென்டிஃபிகேஷன் டெக்னாலஜியானது, டிஜிட்டல் டேட்டாவை டிரான்ஸ்பர் செய்ய பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இதில் ஆண்டெனா (Antenna) சப்போர்ட் இருக்கும். இதன் மூலம் டேட்டா டிரான்மிஷன் நடக்கும். இந்த டெக்னாலஜிக்கு என்கிரிப்ஷன் (Encryption) சப்போர்ட் இருக்கிறது. ஆகவே, டேட்டாவை எளிதாக மாற்ற முடியாது.
ஆகவே, இதில் கொடுக்கப்பட்ட பர்சோனல் டேட்டா மற்றும் பயோமெட்ரிக் டேட்டாக்கள் என்கிரிப்ஷன் செய்யப்பட்டுவிடும். இதனால், பழைய பாஸ்போர்ட்களைவிட அதிக செக்யூரிட்டி கொண்டவையாக ஈ-பாஸ்போர்ட்கள் இருக்கப் போகிறது. ஒரு சிறிய கோல்டு குறியிட்டுடன் இந்த ஈ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது. இதைவைத்து அடையாளம் காணலாம்.
ஈ-பாஸ்போர்ட் எப்படி பயன்படுத்திறது? இந்த புதிய ஈ-பாஸ்போர்ட் மூலம் இமிகிரேஷன் விரைவாக செய்து முடிக்கப்படும். அதே நேரத்தில் குடிவரவு அதிகாரிகள் இதை வைத்து எளிதாக அங்கீகரித்து கொள்ளலாம். மேலும், டேட்டாவும் டிஜிட்டலாக என்கிரிப்ட் செய்யப்பட்டு இருப்பதால், இது கூடுதல் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
பப்ளிக் கீ இன்பிராஸ்டிரக்சர் மூலம் இந்த டிஜிட்டல் டேட்டாக்கள் கட்டுப்படுத்தப்படுவதால், அங்கீகரிக்கப்படாத என்டிட்டி மூலமாக இதை அனுகவோ அல்லது மாற்றவோ முடியாது. சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் உரிமையாளர் மட்டுமே அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு சென்று மாற்ற முடியும். இப்படி ஒட்டுமொத்தமாக பாஸ்போர்ட் மாறிவிட்டது.
இப்போது, ஆரம்ப கட்டத்தில் இருப்பதால், 13 நகரங்களில் மட்டுமே அமல் செய்யப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், அமிர்தசரஸ், புவனேஸ்வர், டெல்லி, கோவா, ஜெய்ப்பூர், ஜம்மு, நாக்பூர், ராய்ப்பூர் மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் இருக்கும் பாஸ்போர்ட் சேவை மையங்களில் வழங்கப்பட்டுவருகிறது. புதிய பாஸ்போர்ட் வங்குவோருக்கு ஈ-பாஸ்போர்ட் கொடுக்கப்பட இருக்கிறது.