No menu items!

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே எச்சரித்துள்ளார்.

அமெரிக்க செனட்டர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, “ சீனா, இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் தலைவர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் உக்ரைன் போர் நிறுத்தத்துக்கான சமாதானப் பேச்சுவார்த்தைகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்த வேண்டும். பேச்சுவார்த்தையை தீவிரமாக எடுத்துக்கொள்ளாத ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்து அவர்களின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கினால், உங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும். இந்த மூன்று நாடுகளும் இதனை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வரிகள் உங்களை மிகவும் கடுமையாக பாதிக்கும்

எனவே இந்த மூன்று நாடுகளின் தலைவர்களும் விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இருக்க வேண்டும் என்று அவரிடம் சொல்லுங்கள். இல்லையெனில் பிரேசில், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் மீது மிகப்பெரிய பொருளாதார தடைகள் விதிக்கப்படும்” என்றார்

முன்னதாக, நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உக்ரைனுக்கு புதிய ராணுவ உதவிகளை வழங்குவதாக அறிவித்தார். மேலும், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாகவும் அச்சுறுத்தல் விடுத்தார். அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்கும் திட்டமும் உள்ளது என்று அவர் கூறினார்.

ட்ரம்பின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ரஷ்ய துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயாராக உள்ளது. ஆனால் இறுதி எச்சரிக்கைகள் விடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதவை. இது எந்த பலனையும் தராது.” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...