நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து சில வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தார்கள். ஆனால் சில வருடங்களில் விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். அதற்கு பிறகு சைதன்யவும், சமந்தாவும் தங்களது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்திவருகிறார்கள். நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார். விரைவில் அவர்களது திருமணம் நடக்கவிருக்கிறது. இந்தச் சூழலில் நாக சைதன்யாவின் பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
திரையுலக தம்பதியினர் விவாகரத்து பெற்றால் அது பேச்சு பொருளாக மாறும். அந்தவகையில் நாக சைதன்யா – சமந்தாவின் விவாகரத்து பெரும் பேசுபொருளானது. இருவரும் காதலித்து வீட்டு சம்மதத்துடன் கோவாவில் 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்தார். ஆரம்பத்தில் திருமணத்துக்கே ஒத்துக்கொள்ளாத நாக சைதன்யா குடும்பம் சமந்தாவின் நடிப்பு பயணத்தையும் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் நாக சைதன்யா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கு சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரிடம், இப்போது சமந்தாவை பார்த்தால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இப்போது அவரை பார்த்தேன் என்றால் ஒரு ஹாய் சொல்லிவிட்டு கட்டிப்பிடிப்பேன்’ என்றார். முன்னதாக சோபிதாவுடன் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து சமந்தாவின் கடைசி புகைப்படத்தையும் சைதன்யா அழித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, வாரிசு நடிகர்கள் தொழில்துறையில் நுழைந்து பட வாய்ப்பை பெறுவதைப் பற்றி ஒருபோதும் வாய் திறக்க மாட்டார்கள். ஆனால் நாக சைதன்யா இதில் மிகவும் நேர்மையாக இருந்தார் மற்றும் எந்த தடையும் இல்லாமல் உண்மைகளை ஒப்புக்கொண்டார்.
இந்தச் சூழலில் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலா இரண்டு பேருக்கும் சில மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் சிம்ப்பிளாக நடந்தது. அதில் இரு வீட்டினரும், உறவினரும் மட்டுமே கலந்துகொண்டார்கள். நிச்சயதார்த்தம் குறித்து ஒரு பேட்டியில் பேசியிருந்த நாகார்ஜுனா, தனது மகனுக்கு இந்த திருமணத்தின் மூலம் மகிழ்ச்சியை மீட்டுக்கொடுத்திருக்கிறேன். இரண்டு பேருமே திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால்தான் இவ்வளவு விரைவாக நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது என்றார்.

 
                                    


