எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாராவிஜயன், எஸ்ஜே சூர்யா, சுராஜ் நடித்த ‘வீரதீரசூரன்’ படம், அடுத்த வாரம் ரிலீஸ். இந்நிலையில், சென்னையில் நடந்த பாடல், டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அருண்குமார் பேசுகையில் ‘‘சித்தா படத்துக்குபின் இதை இயக்கி இருக்கிறேன். 2 பாகங்களாக படம் வருகிறது. ஆனாலும், 2வது பாகம்தான் முதலில் வருகிறது. அது ஏன் என்பது படம் வந்தபின் தெரியும்.
முதலில் வரும் 20 நிமிட காட்சிகளை மிஸ் பண்ணாமல் ரசிகர்கள் பார்க்க வேண்டும். அதில் முக்கியமான விஷயங்கள், கதை இருக்கிறது. ஆக் ஷன் திரில்லர் கதை களத்தில், மன்னிப்பு, வன்முறை, குற்றஉணர்ச்சி என பல விஷயங்களை படம் பேசுகிறது விக்ரம். எஸ்.ஜே. சூர்யா என் மீதான பாசத்தில் நிறைய விஷயங்களை பேசுகிறார்கள். என்னை மீம்ஸ் போட்டு கலாய்க்காதீர்கள்’’ என்றார் .
எஸ்.ஜே.சூர்யா பேசுகையில் ‘‘தமிழில் ஹாலிவுட் தரத்திலான படம் இது. நான் அதிகம் பேசமாட்டேன். படம் பேசும். இயக்குனர் திறமைசாலி, ரொம்பவே நேர்மையானவர். இதுல என்ஜாய் பண்ணி நடிச்சேன். இயக்குனர் வசந்த் சாரிடம் வேலை செய்தபோது பழைய படங்களை அதிகம் பார்க்க சொல்வார். அந்தவகையில் நடிகை சாவித்ரியை ரொம்ப பிடிக்கும். இப்போது துஷாரா விஜயன் சிறப்பாக நடிக்கிறார். அவர் சாவித்ரி மாதிரி புகழ் பெறணும். இந்த படத்துல துாள்ல இருந்த விக்ரம்சாரை மீண்டும் பார்ப்பீங்க. அவர் விக்ரம் சாராக மீண்டும் நிறைய படங்கள் பண்ண வேண்டும்’ என்றார்
விக்ரம் பேசுகையில் ‘‘சித்தா படம் பார்த்தபின் இயக்குனரின் பெயரை சொல்லி அழைத்தது இல்லை. சித்தா என்றுதான் அழைக்கிறேன். வீர தீர சூரன் படத்தில் சேதுபதி மாதிரி ரகளையும் இருக்கும். சித்தா மாதிரி எமோஷனலும் இருக்கும். முன்பு இயக்குனர் எஸ்ஜே சூர்யாவுக்கு ரசிகராக இருந்தேன். இப்ப, நடிகர் எஸ்.ஜே சூர்யாவுக்கு ரசிகர் ஆகிவிட்டேன். அவர் சரியாக துாங்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார். ஒரு படத்தில் இருந்து இந்த விழாவுக்கு வந்திருக்கிறார். அடுத்து இந்த பட டப்பிங் செல்கிறார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இந்த படத்துக்கு இன்னொரு கதாநாயகன். அவர் எனக்கு லக்கி. நானும், அவரும் சேர்ந்த படங்கள் அனைத்தும் பேசப்பட்டன. அந்த படங்களில் இசை ஒரு கருவியாக இருந்தது. பாடலாசிரியர் விவேக் நல்ல வரிகளை கொடுத்து இருக்கிறார். என் பேத்தி இந்த பாடல் வரிகளை தொடர்ந்து பாடிகிட்டு இருக்காங்க. என் ரசிகர்கள் வேறு மாதிரி படங்கள் பண்ணனும் எதிர்பார்த்திட்டு இருந்தாங்க. நானும் அந்த மனநிலையில் இருந்தேன். இந்த படம் அமைந்துள்ளது. இது ரசிகர்களுக்காக பண்ணிய படம். அவர்கள் கண்டிப்பாக ரசிப்பாங்க. இயக்குனர் அருண் என் நண்பர், தம்பி மாதிரி. இதில் நடித்து இருக்கும் சுராஜ் படத்தில் கலக்கியிருக்கிறார்.