சஷிகாந்த் இயக்கத்தில் மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீராஜாஸ்மின், காளி வெங்கட் நடித்த டெஸ்ட் படம், இன்று (ஏப்ரல்4)ல் நெட்பிளிக்சில் வெளியாகி உள்ளது. பெட்ரோலுக்கு பதில் தண்ணீரால் வாகனத்தை ஓட்ட வைக்க ஒரு மிஷினை கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி மாதவன். ஆனால், அதை அரசு அங்கீகரிக்க மறுக்கிறது. அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த 5 கோடி கமிஷன் கேட்கிறார் ஒரு உயர் அரசு அதிகாரி.
குழந்தை இல்லாமல் தவிக்கும் நயன்தாரா, அதற்கான நவீன சிகிச்சைக்கு செல்ல நினைக்கிறார். அதற்காக அவருக்கு சில லட்சங்கள் தேவைப்படுகிற நிலை. ஆனால், பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும் மாதவனால் மனைவி சிகிச்சைக்கு பணம் கொடுக்க முடியாமல், பல லட்சம் கடனை கட்ட முடியாமல் தவிக்கிறார்.
அந்த சமயத்தில் சென்னையில் இந்தியா பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. பல்வேறு பிரஷர் காரணமாக, அந்த போட்டியுடன் ஓய்வு பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கிரிக்கெட் வீரர் சித்தார்த். அவர் மகன் படிக்கும் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார் நயன்தாரா. சின்ன வயது தோழியும் கூட. அந்த கிரிக்கெட் போட்டியில் ஒரு கும்பல் பெட்டிங் மூலம் சம்பாதிக்க நினைக்கிறது. அவர்கள் வலையில் வீழ்கிறார் மாதவன். சித்தார்த் மகனை கடத்தி வைத்துக்கொண்டு, நான சொல்கிற படி நீ கிரவுண்டில் விளையாட வேண்டும் என்று சித்தார்த்தை மிரட்டுகிறாார். மகனுக்காக வேறு வழியின்றி சித்தார்த் தலையாட்டுகிறார். கடைசியில் ஜெயித்தது இந்தியா? பாகிஸ்தானா? மாதவன் கண்டுபிடிப்பை அரசு அங்கீகரித்ததா? நயன்தாரா கணவன் செயலுக்கு துணை நின்றாரா? பெட்டிங் விஷயத்தை மோப்பம் பிடிக்கும் போலீஸ் செய்தது என்ன? தனது மகனை மீட்டாரா சித்தார்த் என்ற ரீதியில் டெஸ்ட் கதை செல்கிறது. சக்திஸ்ரீகோபால் இசையமைத்துள்ளார்.
பல படங்களில் ஹீரோவாக, சாக்லெட் பாய் ஆக நடித்துள்ள மாதவன் டெஸ்ட் படத்தில் வில்லத்தனமான ரோலில் வருகிறார். சித்தார்த் சின்ன வயது மகனை கடத்தி வைத்துக்கொண்டு, அவரை மிரட்டுகிற கேரக்டர். இது குறித்து மாதவனிடம் கேட்டால், ‘‘முதலில் இந்த கதையில் நடிக்க மாட்டேன். இப்படிப்பட்ட கேரக்டர் எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனால், இயக்குனர் கதையை விவரித்து நடிக்க வைத்தார். ஹீரோயிசம் இல்லாவிட்டாலும், சாதிக்கிற மாதிரியான நல்ல ரோல் என்று இயக்குனர் சொன்னார். அதை புரிந்துகொண்டு நடித்தேன். வாழ்க்கையில் நான் அனுபவிக்காத பல விஷயங்கள், இந்த கேரக்டரில் இருந்தது. தோல்வி அடை ந்தவனாக நடித்து இ ருக்கிறேன் . இந்த படம் ஓடிடியில் வெளியாகிறது. ஒரே நேரத்தில் 60 கோடி பார்வையாளர்களை சென்றடைகிறது. ஆனால், தியேட்டரில் தமிழகத்தில் அதிக பட்சம் 16 லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்க்கிறார்கள்.