No menu items!

கமல் 65 – மணிரத்னம் வைத்த பேனர்!

கமல் 65 – மணிரத்னம் வைத்த பேனர்!

நடிகர் கமல்ஹாசன் திரை உலகிற்கு வந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி எம்.ஜி.ஆர். சிவாஜி, ஜெமினி, சாவித்ரி உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து பழுத்த அனுபவத்தை கொண்டிருக்கும் கமல்ஹாசன் இந்திய சினிமாவின் மிகப்பெரிய கௌரவம் என்றே சொல்லலாம்.

ஆரம்பத்தில் நடன இயக்குனரின் உதவியாளராக தங்கப்பன் மாஸ்டரிடம் நடனக்கலைஞராக பணியாற்றினார். பிறகு பாலசந்தரின் ஆசி பெற்று அவரது பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். கூடவே சினிமாவில் இருக்கும் அனைத்து தொழில்நுடபம் பற்றிய அறிவை வளர்த்துக் கொண்டார். ஒளிப்பதிவு, சண்டை, கதை, திரைக்கதை என்று பல்வேறு துறைகளில் அனுபவம் உள்ள நபர்களிடம் பழகி அந்த ஞானத்தைப் பெற்றுக்கொண்டார். அந்த விஷயத்தில் கமல்ஹாசன் இதற்காக எந்த அளவுக்கும் இறங்கிப் போய் கற்றுக் கொள்வார்.

அப்படி தான் கற்றுக்கொண்ட பல விஷயங்களை திரையுலகில் தான் நடிக்கும் படங்களில் பயன்படுத்துவதில் முதல் நபராக இருப்பவரும் கமல்ஹாசன் தான். அனுபமுள்ள இயக்குனரின் திரைப்படங்களில் நடிக்கும் போது அவர்கள் சொன்னதை மட்டுமே செய்யும் கமல், தான் கதாயாநாயகனாக தனிப்பட்ட முறையில் நடிக்க ஆரம்பித்த பிறகு பல பரிசோதனை முயற்சிகளை திரையுலகில் ஏற்படுத்தினார்.

அப்படி அவர் தயாரித்த படங்களில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு திரைப்படத்தில் பாடல்களே இல்லாமல் எடுத்தார். சத்யராஜ் நடித்திருந்தார். குருதிப்புனல் திரைப்படத்தில் வழக்கமான திரைப்படமாக இல்லாமல் நக்சலைட்டுகள் பற்றி பேசியிருந்தார். விகரம் திரைப்படத்தில் இன்றைய ராக்கெட் அறிவியல் பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருந்தார். அபூர்வ சகோதரர்கள் படத்தில் உருவம் குறைந்த வேடத்தில் நடித்து அதை இன்று வரைக்கும் ரகசியமாகவே வைத்திருக்கிறார். ஹேராம் திரைப்படத்தில் காந்தியடிகளின் நிஜ வாழ்க்கையை ஒட்டிய சம்பவத்தை படமாக்கியிருந்தார். இந்தப்படத்தின் போதுதான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியின் போது புகைப்படத்திற்கு பதில் போட்டோக்கள் அடங்கிய சிடியை கொடுத்து முதல் டெக்னாலஜி பரிவர்த்தனையை தொடங்கி வைத்தார். விஸ்வரூபம் திரைப்படத்தில் டால்பி அட்மாஸ், அவ்வை சண்முகி படத்தில் பெண் வேடம், தசாவதாரத்தில் பத்து வேடங்கள் என்று தமிழ் சினிமாவிற்கு பல புதிய விஷயங்களை கொடுத்து உலக திரைப்படங்களுக்கு இணையான மரியாதையை கொடுக்க வைத்தார்.

தற்போது நாயகன் திரைப்படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் நடித்த பிறகு மீண்டும் அவரோடு இணைந்து தக் லைப் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முதல் பாதி முடிந்து தயாராகியிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தைப் பார்த்து ரசித்திருக்கிறார் கமல். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்த கமல்ஹாசனுக்கு இயக்குனர் மணிரத்னம் சிறப்பான மரியாதையைக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து படக்குழுவினரோடு கமல்ஹாசனுக்கு பிரமாண்ட பேனர் வைத்து அதில் களத்தூர் கண்ணம்மா கமல் தக் ;லைப் கமல் இருவரையும் வைத்திருந்தார். கூடவே படக்குவினரோடு கைதட்டி ஆரவாரம் செய்து கமல்ஹாசனை வரவேற்றார் மணிரத்னம் எப்போதும் விழாக்களில் ஒதுங்கியே இருக்கும் அவர், இந்த இடத்தில் இளம் தலைமுறையினரோடு கூச்சலிட்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நேரத்தில் கமலின் பிக்பாஸ் விலகல் பெரிய அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தியன் 2 படத்திற்கு கிடைத்த பல்வேறு விமர்சனங்கள் தனது அடுத்த படங்களில் தீவிர கவனத்தை செலுத்த வைத்திருக்கிறது. விக்ரம் எப்படி வியாபார ரீதியாக பெரிய வெற்றி பெற்றதோ அதே போல தக் லைப் படத்தையும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வேகம் கமலுக்கு வந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.

பெரிய அளவில் பணம் கிடைக்கும் பணியாக இருந்தாலும் ஒரு படைப்பை தரமாக உருவாக்க வேண்டும் என்றால் அந்த பெரிய லாபத்தையும் விட்டுக் கொடுக்கும் மனம் தான் கமல்ஹாசனை இன்றளவுக்கும் நல்ல கலைஞனாக நம் நிறுத்தியிருக்கிறது.

அதனால்தான் அவர் உலக நாயகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...