ஜெயம் ரவி அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க இருக்கிறார். மும்பைக்கு மாறிய பிறகு, ஜெயம் ரவி தனது அடுத்தக் கட்ட வேலைகளை தொடங்கியிருக்கிறார், மும்பையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ‘ ஜவான் ‘ ஆடை வடிவமைப்பாளர் அனிருத் சிங்குடன் சந்தித்து தனது புதிய கெட்டப்பிற்கான ஐடியாவை உருவாக்கி வருகிறார். முதல் கட்டமாக மும்பையில் ஒரு விளம்பரத்திற்காக ஜெயம் ரவி படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார், ரவியின் பாலிவுட் முயற்சிகளுக்கு அங்குள்ள முன்னணி ஹீரோ ஒருவர் உதவி வருகிறார்.
ஜெயம் ரவி, ஆர்த்தியை விட்டு பிரிந்ததாக பத்திரிக்கை மூலம் அறிவித்ததோடு, விவாகரத்து கோரியும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து ஜெயம் ரவி தனது மனைவி மீது போலீசில் புகார் அளித்தார். தொடர்ச்சியான புகார்கள் மற்றும் சூடான விவாகரத்து விவாதத்திற்குப் பிறகு, மும்பையில் தங்குவார் என்று தெரிகிறது.
தற்போதைக்கு எம் ராஜேஷ் இயக்கிய பிரதர் படம் இந்த தீபாவளிக்கு பெரிய திரைகளில் வரத் தயாராகிறது. ஜெயம் ரவியும் ஜெனி மற்றும் ‘ காதலிக்க நேரமில்லை ‘ படங்களில் நடிக்க இருக்கிறார், இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கிறது.
இதுமட்டுமல்லாமல் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற ‘டாடா’ என்ற திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ஜெயம் ரவி. இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அடுத்தடுத்து பல படங்களில் அதுவும் குறிப்பாக வித்தியாசமான படங்களை கொடுக்கும் இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி வருகின்றார் ஜெயம் ரவி. தனது அண்ணன் மோகன் ராஜா தனி ஒருவன் இரண்டாம் பாகத்தை படத்தை இயக்க இருக்கிறார். இதற்காக 90 நாட்கள் கால்ஷீட் கொடுக்க ஜெயம் ரவி தயாராக இருக்கும் நிலையில் மோகன் ராஜாவுக்கு தம்பி ரவி மீது இன்னும் வருத்தம் தீரவில்லை என்கிறார்கள். ஆர்த்தி விவகாரத்தில் பல மாதங்களுக்கு முன்பே ராஜா எச்சரிக்கையாக சில சம்பவங்களை சொல்லியிருக்கிறார் என்றும் இது பற்றி அப்போதைக்கு ரவி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் இதனால் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை இல்லாமல் பல காலம் இருந்திருக்கிறார்கள். இப்போது ரவி தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து செயல்பட்டு வரும் நிலையில் இன்னும் சில தெளிவான முடிவுகளை அவர் எடுக்கட்டும் என்று காத்திருக்கிறாராம் மோகன் ராஜா.