எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாக வாய்ப்பு
த.வெ.க தலைவர் ஆனதால், அரசியலில் தீவிரம் காண்பிக்க இருப்பதால், இது என்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்டார் விஜய். இந்த படத்தை முடித்துவிட்டு சட்டசபை தேர்தல் பிரச்சாரம், சுற்று பயணத்தில் தீவரம் காண்பிக்க உள்ளார். தலைப்புக்கு ஏற்ப இது அரசியல் சார்ந்த படம், இந்த படத்தின் காட்சிகள், பாடல்கள் விஜயின் அரசியலுக்கு பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த படத்தில் ஹீரோயின் பூஜாஹெக்டே, வில்லன் பாபிதியோல், முக்கியமான வேடத்தில் நடிக்கும் ப்ரியாமணி தவிர, ஏகப்பட்டபேர் சர்ப்பிரஸை் ஆக நடிக்கிறார்கள் என கேள்வி. அப்படி யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்று விசாரித்தால் கோட் படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனம் ஆடினார். இந்த படத்தில் டிராகன் புகழ் காயது லோகர் அல்லது சமந்தா அல்லது பிரபல பாலிவுட் நடிகை ஒரு பாடலுக்கு ஆட வாய்ப்பு. இது தவிர, இன்னொரு பாடல்காட்சியில் விஜயை வைத்த பீஸ்ட் படம் இயக்கிய நெல்சன், கோட், மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ்கனகராஜ், பிகில், மெர்சல், தெறி படங்களை இயக்கிய அட்லி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் டான்ஸ் ஆட உள்ளனர். இது உறுதியாகி உள்ளது. விஜய் கடைசி படம் என்பதால் இந்த 3 இயக்குனர்களும், விஜயுடன் திரையில் தோன்ற உள்ளனர். வழக்கம்போல் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு சிறப்பு காட்சியில் தோற்ற உள்ளார்
இவர்களை தவிர, இன்னும் சில பிரபலங்கள் படத்தில் இருக்கிறார்கள். அதெல்லாம் சஸ்பென்ஸ். எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயை அறிமுகப்படுத்தினார். இ்பபோது விஜய் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.