ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான், ராஷ்மிகாமந்தனா, சத்யராஜ் நடித்த சிக்கந்தர் என்ற இந்தி படம், ரம்ஜான் விடுமுறைக்கு வெளியாகி உள்ளது. இந்தியில் 2008ம் ஆண்டு கஜினியை ரீமேக் செய்தார் முருகதாஸ். அதில் அமீர்கான், அசின் நடித்தனர். அந்த படம் அப்போதே 100 கோடியை வசூலித்து, சாதனை படைத்தது. நீண்ட இடைவேளைக்குபின் முருகதாஸ் இயக்கும் படம் என்பதால் சிக்கந்தருக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. படம் எப்படி? வெ ற்றியா? தோல்வியா? சுமாரா என்று விசாரித்தோம்.
ராஜ்கோட் அரச குடும்பத்தை சேர்ந்த சல்மான்கான், விமானத்தில் ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்யும் ஒருவனை துவைத்து எடுக்கிறார். அவனோ மந்திரி சத்யராஜ் வாரிசு. அப்புறமென்ன, சல்மான்கானை எதிர்க்கிறார் சத்யராஜ். அதில் அவர் தனது மகனை பறி கொடுக்கிறார். இதற்கிடையில் சல்மான்கான் மனைவியாக ராஷ்மிகா மரணமடைய இதயம், கண், நுரையீரல் ஆகியவை, உடல் உறுப்பு தான முறையில் 3பேருக்கு பொருத்தப்படுகிறது. மனைவியின் மீதான அன்பால், அந்த 3பேர் மீது பாசமாக இருக்கிறார் சல்மான்கான். அதை தெரிந்து கொண்ட சத்யராஜ், அந்த 3பேரையும் கொல்ல நினைக்கிறார். என்ன நடக்கிறது என்பது கதை.
சல்மான்கான் ரசிகர்களுக்கு படம் பெரியளவில் பிடிக்கவில்லை. கதையும் அந்த காலத்தை சேர்ந்தது. ப்ரீதம் பாடல்கள் ஈர்க்கவில்லை. திரைக்கதை சரியில்லை என்று விமர்சனங்கள் வர, இதுவரை படம் 200 கோடி அளவுக்கு மட்டுமே வசூலித்துள்ளது. சிக்கந்தர் பெரிய வெற்றியை தரவில்லை. சல்மான்கான் தரப்பு அப்செட் என தகவல். கஜினிக்கு பின் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கலாம் என்ற நினைத்த முருகதாஸ் ஆசை நிறைவேறவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராசி படத்தை அவர் இயக்கி வருகிறார். அந்த படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.