தங்கள் வாழ்நாள் முழுக்க, இரவு பகலாக உழைத்து, ஒட்டு மொத்தமாக ஒரு கோடி, ஏன் 10 லட்சம் சம்பாதிக்க முடியாதவர்கள் அதிகம் வாழும் மாநிலம் இது. அதாவது, 50, 60 ஆண்டுகள் உழைப்பவர்கள் கூட, கடைசியில் இந்த தொகையை சம்பாதிக்க முடியாமல் மறைந்து போகிறார்கள் அல்லது கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சினிமாவில் மட்டும் வெற்றி கொடுத்துவிட்டால் கோடி என்பது சர்வ சாதாரணம். அதற்கு உதாரணம் இயக்குனர் அட்லீ. ஆம், அவரின் அடுத்த பட சம்பளம் 100 கோடியாம்.
ஒரு படத்தை இயக்க 100 கோடி கொடுப்பார்களா? இதற்கு முன்பு தமிழில் 100 கோடி சம்பளம் யாராச்சும் வாங்கியிக்கிறார்களா என கோலிவுட்டில் விசாரித்தால் ‘‘100 ஆண்டுகால சினிமாவில் எந்த இயக்குனரும் இதுவரை 100 கோடி சம்பளம் வாங்கியது இல்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் சம்பளம் 100 கோடியை தாண்டிவிட்டது. ஆனால், அவர்கள் எவ்வளவு கணக்கு காண்பிக்கிறார்கள்.எவ்வளவு வரி கட்டுகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்
சரி, அட்லீக்கு ஏனிந்த மவுசு என்றால், அவர் கொடுத்த ஹிட்தான். காரணம். தமிழில் சில ஹிட் கொடுத்தவர், இந்தியில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வசூலை அள்ளியது. அதிலிருந்து இந்தியளவில் கவனிக்கப்படும் முன்னனி இயக்குனர் ஆகிவிட்டார் அட்லி. ஜவான் படத்துக்குபின் அவர் சல்மான்கனை வைத்து படம் இயக்க முயற்சித்தார். ஆனால், ஏனோ அது நடக்கவில்லை. இப்போது ‘புஷ்பா’ ஹீரோ அல்லு அர்ஜூனை வைத்து பான் இந்தியா படம் இயக்க உள்ளார். அதற்காகதான் ரூ 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அந்த படத்தை தயாரிக்கப்போவது ‘வாரிசு’, ‘கேம் சேஞ்சர்’ போன்ற படங்களை தயாரித்த தில் ராஜூ
இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழில் அதிக சம்பளம் பெற்றது. அட்லீயின் குருநாதர் ஷங்கர்தான். அவர் ‘கேம் சேஞ்சர்’ படத்துக்காக 50 கோடிவரை பெற்றதாக தகவல். முருகதாஸ், லோகேஷ் கனகராஜ், நெல்சன் போன்றவர்கள் 25 கோடி வரை சம்பளம் பெறுவதாக தகவல். தெலுங்கில் கூட 100 கோடி சம்பளத்தை எந்த இயக்குனரும் பெற்றதில்லை.அந்தவகையில் அட்லீ பெறப்போகும் சம்பளம் ஒரு சாதனையாக பேசப்படுகிறது.