No menu items!

IPL 2024 – CSK அணியில் ஆடப் போவது இவர்கள்தாம்!

IPL 2024 – CSK அணியில் ஆடப் போவது இவர்கள்தாம்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்கள்தான் உள்ளன. வெள்ளிக்கிழமை நடக்கும் முதல் போட்டியில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து முதல் போட்டியில் ஆடப்போகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பே டெவன் கான்வே, பதிரனா ஆகியோரின் காயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வருத்தமடையச் செய்துள்ளது. ஆனால் இதுபோன்ற காயங்களையெல்லாம் மனதில் வைத்துதான் ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்குர், டேரில் மெட்செல் போன்ற வீர்ர்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியிருக்கிறது. இந்த சூழலில் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 11 வீர்ர்கள் யாராக இருப்பார்கள் என்று ஒரு பருந்துப் பார்வை பாத்துவிடலாம்.

தொடக்க ஆட்டக்காரர்கள்:

கடந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது அதன் தொடக்க ஜோடியான டெவன் கான்வேயும், ருதுராஜ் கெய்க்வாட்டும்தான். இந்த தொடரில் காயம் காரணமாக முதல் 10 போட்டிகளிலாவது டெவன் கான்வே ஆட முடியாது. அதனால் அவருக்கு பதிலாக மற்றொரு நியூஸிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்காக ஆடிய ரச்சின் ரவீந்திரா 500 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். அதனால் ருதுராஜுடன் ரச்சின் ரவீந்திராவையே சிஎஸ்கே அணி முதலில் களம் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரச்சின் சொதப்பினால் மட்டும் வேறு வீர்ர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்த மாற்று வீர்ர்களில் இங்கிலாந்து வீர்ரான மொயின் அலியும் கவனிக்கத்தக்க வீர்ராக இருப்பார்.

மிடில் ஆர்டர்

மிடில் ஆர்டரில் ஆடுவதற்காகவே டெரில் மிட்செல், சமீர் ரிஸ்வி ஆகிய 2 வீர்ர்களை இந்த ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கியுள்ளது. இதில் டெரில் மிட்செலைப் பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் ஒற்றை ஆளாக கடைசிவரை போராடியவர் டரில் மிட்செல். அந்த நம்பிக்கையில்தான் அவரை வாங்கிப் போட்டிருக்கிறது சிஎஸ்கே அணி. மற்றொரு வீர்ரான சமீர் ரிஸ்வி உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது இளம் ஆட்டக்காரர். ரஞ்சி டிராபி. சி.கே.நாயுடு டிராபி போன்ற உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடியதால் கோடிகளை கொட்டிக் கொடுத்து இவரை வாங்கியிருக்கிறது சிஎஸ்கே. இந்த இருவருடன் அஜிங்க்ய ரஹானே, தோனி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிஎஸ்கே அணிக்கு மிடில் ஆர்டரில் பலம் சேர்ப்பார்கள். இதில் அஜிங்ய ரஹானே இம்பாக்ட் பிளேயராக களம் இறங்க வாய்ப்பு அதிகம்.

வேகப்பந்து வீச்சாளர்கள்:

சிஎஸ்கே அணிக்கு கடந்த ஐபிஎல்லில் நட்சத்திர பந்துவீச்சளராக இருந்தவர் பதிரணா. ஆனால் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் பதிரணா ஆடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதைப்பற்றியெல்லாம் சிஎஸ்கே அணி கவலைப்பட தேவையில்லை. கடந்த காலங்களில் சிஎஸ்கே அணிக்கு வேகப்பந்து வீச்சில் கைகொடுத்த ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் ஜோடி இம்முறையும் கைகொடுக்க தயாராக இருக்கிறது. பந்துவீச்சுடன் தங்கள் பேட்டிங்கையும் அவர்கள் கூர்தீட்டி இருப்பது நிச்சயம் தோனியை கவரும். இவர்களுடன் தேவைப்பட்டால் துஷார் தேஷ்பாண்டேவையும் சிஎஸ்கே அணி பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

சுழற்பந்து வீச்சு:

சிஎஸ்கே அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்களான ரச்சின் அரவீந்திரா, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகியோர் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களாகவும் உள்ளதால் மேற்கொண்டு ஒரு ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர் மட்டும் இருந்தால் போதும். அந்த இடத்துக்கு சிஎஸ்கே அணி தீக்‌ஷணாவை தேர்ந்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

இந்த பட்டியலின்படி சிஎஸ்கே அணியின் பிலேயிங் லெவனில் இருக்க வாய்ப்புள்ளவர்கள்:

தோனி (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, டெரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, தீக்‌ஷணா

(இம்பாக்ட் வீர்ர்) – அஜிங்க்ய ரஹானே

மாற்று வீர்ர்கள்: மொயின் அலி, முகேஷ் சவுத்ரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...