அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களுக்கு கைவிலங்கு, கால் விலங்கு போட்டு கடந்த வாரம்தான் ட்ரம்ப் அரசு விமானத்தில் திருப்பி அனுப்பியது. அதற்க்குள் அதே போன்ற நடவடிக்கையில் இங்கிலாந்து அரசும் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவைப் போலவே இந்தியர்கள் பலரும் இங்கிலாந்து நாட்டிலும் சட்ட விரோதமாக நுழைந்து வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு பக்கம் மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் நுழைய, மறுபக்கம் இங்கிலீஷ் சேனல் வழியாக இந்தியர்கள் நுழைந்து வருகிறார்கள். அந்த நாட்டுக்குள் நுழைந்த பிறகு, அடைக்கலம் கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். கடந்த வருடம் மட்டும் இந்த முறையில் சுமார் 1,000 பேர் இங்கிலாந்துக்குள் நுழைந்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தியர்களைப் போல் மற்ற நாட்டுக்காரங்களும் இதே ரூட்டில் இங்கிலாந்துக்குள் நுழைந்து விடுகிறார்கள். அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைந்ததாக இங்கிலாந்து அரசு சொல்கிறது.
இந்த வகையில தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமா தங்கி வேலை பார்த்து வரும் வெளிநாட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றும் பணிகளில் இங்கிலாந்தின் உள்துறை மற்றும் அமலாக்கத்துறை அமைச்சக அதிகாரிகள் ஈடுபட்டிருக்காங்க. ஓட்டல்கள், , வாகனங்களைக் கழுவும் நிலையங்கள், லாண்ட்ரி நிறுவனங்கள்னு சட்டவிரோதமா வர்றவங்க தங்கி வேலை பார்க்கிற வாய்ப்பு இருக்கற 828 இடங்கள்ல அதிகாரிகள் ரெய்ட் நடத்தி இருக்கிறார்கள். இந்த லிஸ்ட்டில் இந்தியர்கள் நடத்தும் ஓட்டல்களில் அதிக அளவு ரெய்ட்கள் நடத்தப்பட்டிருக்கு.
இந்த ரெய்ட்கள் மூலமா 609 பேர் கைது செய்யப்பட்டு அவங்களோட நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டதா இங்கிலாந்து அரசு சொல்லியிருக்கு. அதனால தங்கள் நிலை என்ன ஆகுமோன்னு அங்க சட்டவிரோதமா தங்கி இருக்கிற இந்தியர்கள் கவலைப்படறாங்க.