சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடித்த ‘அமரன்’ படம் பெரிய வெற்றி பெற்றது. 400 கோடி வரை வசூலித்துள்ளது. குறிப்பாக, மறைந்த ராணுவ அதிகாரி முகுந்த வரதராஜன் மனைவியான இந்து ரெபெக்கா கேரக்டரில் நடித்த சாய்பல்லவி நடிப்பை பலரும் பாராட்டினார்கள். இந்நிலையில், சாய்பல்லவி ஹீரோயினாக நடித்த தண்டேல் படம், உலகம் முழுக்க நாளை ரிலீஸ் ஆகிறது. சந்து இயக்கிய இந்த படத்தில் நாகசைதன்யா ஹீரோ. தமிழ். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தண்டேல் ரிலீஸ் ஆகிறது.
குஜராத் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி பாகிஸ்தான் செல்கிறார்கள். அங்கே சிறையில் அடைக்கப்பட, அவர்கள் தப்பித்தார்களா? விடுதலை செய்யப்பட்டார்களா என்பது தண்டேல் கதை. நாகசைதன்யா மீனவராக வருகிறார். அவரை காதலிப்பவராக நாகசைதன்யா நடித்துள்ளார். தண்டேல் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்கான காரணம் என்ன? என சாய்பல்லவியிடம் கேட்டபோது அவர் கூறியது:
‘‘ ஒரு உண்மை சம்பவத்தை தழுவி கதை எழுதப்பட்டிருந்ததால் என்னை இந்த படம் மிகவும் கவர்ந்தது. இந்த கதையின் வடிவத்தை கோவிட் காலகட்டத்தில் இயக்குநர் சந்து கொடுத்து படிக்கச் சொன்னார். அதில் அப்போது என்ன சம்பவம் நடந்தது? ஏன் நடந்தது என்பது போன்ற விவரங்கள் பக்காவாக இடம் பிடித்திருந்தது. குறிப்பாக, பாகிஸ்தானில் சிறை அடைப்பட்டிருந்த மீனவர்களை, அவர்களின் மனைவி, குடும்பத்தினர் எப்படி மீட்டு வந்தார்கள் என்ற விஷயம் தெளிவாக, அழுத்தமாக இருந்தது. அதை படித்தவுடன் இந்த படத்தில் நடிக்க வேண்டும். ரசிகர்களுக்கு இந்த கதை சரியான விதத்தில் சென்றடையும் என கணித்தேன். ஒரு படத்தில் நான் நடிக்க வேண்டுமென்றால் கதை, கதாபாத்திரம், இயக்குநர். இந்த மூன்றையும் கவனிப்பேன். என்னைத் தேடி வரும் நல்ல கதைகள் எந்த மொழியில் இருந்தாலும் அதில் நடிப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷயத்தை கற்றுக் கொண்டே தான் இருக்கிறேன்.