சுந்தர்.சி இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் கேங்கர்ஸ் படம், ஏப்ரல் 24ம் தேதி வெளியாகிது. சென்னையில் நடந்த இந்த படவிழாவில் வடிவேலு கலந்துகொண்டு காமெடியாக பேசியதாவது
நானும், சுந்தர்.சியும் பல ஆண்டுகளுக்குபின் இணைந்து இருக்கிறேன். எங்கள் கூட்டணிக்கு எப்போதும் வரவேற்பு அதிகம். கேங்கர்ஸ் படமும் அப்படியே. இந்த படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும். அப்பதான் நல்லா இருக்கும். ஒரு காமெடி சீன் வரும்போது. தியேட்டர் ஓரத்தில் ஒருத்தர் சிரிக்க ஆரம்பிப்பார். அது, அப்படியே பரவி, தியேட்டர் முழுக்க சிரிப்பார்கள். அந்த பயர் நல்லா இருக்கும். இந்த படத்தில் நான் பல கெட்அப்பில் வருகிறேன். சில மீடியாக்களில் இங்கே ஒன்று கேட்டு, அங்கே ஒன்று கேட்டு, இரண்டு தரப்புக்கும் இடையே சண்டையை உருவாக்குவார்கள். அந்த மாதிரி யார் பார்த்த வேலையோ, எங்கள் கூட்டணி பிரிந்தது. இப்போது சேர்ந்துவிட்டோம். கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, சுந்தர். சி ஆகியோர் படங்களில் நான் நடிக்கும்போது அந்த படம் ஹிட்டாகும். எனக்கு என்ன வரும்னு அவங்களுக்கு தெரியும். நானும் அவர் கொடுப்பதை கூடுதலாக , சிறப்பாக செய்வேன். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. நாங்க படம் குறித்து பேசி, 35 நாளில் படத்தை முடித்தோம். வின்னர் படம் மாதிரி, இந்த படமும் வெற்றி அடையும்
`நான் யாருடன் நடித்தாலும், எந்த ஹீரோவுடன் நடித்தாலும் என் வேலையை சிறப்பாக செய்யணும்னு நினைப்பேன். இந்த பாணியை, பழக்கத்தை கவுண்டமணி சாரிடம் கத்துகிட்டேன். சந்திரமுகி படத்தில் ரஜினி சார் இருந்தாலும், என் காமெடி கொஞ்சம் துாக்கலாக இருந்தது. அதற்கு காரணம் இயக்குனர்தான். அவர்கள் கொடுக்கிற வேலையை செய்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு காமெடியை துாக்கலாக கொடுக்க நினைப்பேன். நான் நகைச்சுவை நடிகராக நடிச்சு இருக்கிறேன். குணசித்திர நடிகர் ஆகவும் நடிச்சு இருக்கிறேன். நான் சின்ன வயதில் கஷ்டப்பட்டேன். கொஞ்சம் சீரியஸ் ஆக இ ருந்தேன். ஆனால், நண்பர்களுடன் அடிக்கிற கலாட்டா பிற்காலத்தில், என்னை நகைச்சுவை தொழிலில் இறங்க வைத்துவிட்டேன். ஓரளவு பாடுவேன். என்னை பாடவைத்தார்கள். தேவர் மகன், மாமன்னன் படங்களில் குணசித்திர நடிகராக நடித்தேன்.
நான் எம்ஜிஆர் ரசிகன். ரஜினி சிறந்த மனிதர். அவர் யாரையும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன். அவர் ஆன்மிகவாதி. அவரை அனைவருக்கும் பிடிக்கும். தனது தாயின் கர்ப்பபையில் நடனம் ஆடியவர் பிரபுதேவா. அவர் பிறவி கலைஞர். துபாய் குறுக்குசந்து புகழ் பார்த்திபனுடன் பல படங்களில் நடித்து இருக்கிறேன். அவருடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசையாக இருக்கிறேன். அதை மக்களும் எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார்
சுந்தர்.சி பேசுகையில் ‘‘இந்த படத்தலைப்பை வடிவேலுதான் கொடுத்தார். கேங்ஸ்டர் என்ற வார்த்தைதான் உண்டு. அவர் கேங்கர்ஸ்னு சொல்ல, அதுவே ஓகே ஆனது. தப்பான தலைப்பை அவர் கொடுத்தாலும், இந்த கதைக்கு செட்டானது. கேங்கர்ஸ் டீசர் பார்த்துவிட்டு சிம்பு போனில் பாராட்டினார். நீங்க துாங்கிட்டு இருக்கிற சிங்கம் என்று நான் அவரை பாராட்டினேன். அஜித்தும், நானும் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அப்போது அவருக்கு உடல்ரீதியாக நிறைய பிரச்னை. ஆனாலும், அதை பொறுத்துக்கொண்டு சிறப்பாக நடித்தார்.