இந்தியா – ஜொ்மனி இடையேயான வா்த்தகதை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன’ என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
இந்தியா வந்துள்ள ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேஃபுல் சந்திப்புக்குப் பிறகு இந்தக் கருத்தை பிரதமா் தெரிவித்தாா்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஜோஹான் வடேஃபுலை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. இரு நாடுகளிடையேயான ராஜீய உறவு 25-ஆவது ஆண்டை எட்டியுள்ளது.
துடிப்பான ஜனநாயக நாடுகளாக மட்டுமின்றி முன்னணி பொருளாதார நாடுகளாகவும் திகழும் இந்தியாவும் ஜொ்மனியும் வா்த்தகம், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி என பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன.
பன்முக உலகம், அமைதி மற்றும் ஐ.நா. சீா்திருத்தங்களுக்கான தொலைநோக்குப் பாா்வையை நாங்கள் பகிா்ந்துகொள்கிறோம். ஜொ்மன் பிரதமா் இந்திய வர அழைப்பு விடுக்கிறேன் என்று குறிப்பிட்டாா்.