No menu items!

செப்டம்பர் மாதம் அதிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

செப்டம்பர் மாதம் அதிக கனமழை – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

கடந்து சென்ற ஆகஸ்ட் மாதம் கனமழையைக் கொடுத்துவிட்டுப் போயிருக்கும் நிலையில், வந்திருக்கும் செப்டம்பர் மாதம் இயல்பான அளவை விட அதிக மழைப்பொழிவைக் கொடுக்கும்என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்த பருவமழைக்காலம் வட இந்திய மாநிலங்களைப் புரட்டிப்போட்டு வரும் நிலையில், தில்லி – என்சிஆர் பகுதிகளுக்கு இன்றும் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து.

நொய்டா, குருகிராம், காஸியாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏற்கனவே பல நகரங்கள் மூழ்கிக் கிடக்கின்றன.

ஹிமாசலம், உத்தரகண்ட் மாநிலங்களுக்கும் மிக மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏற்கனவே கனமழை பெய்து பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கும் ஒன்றும் குறைவில்லாத வகையில், பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட இந்திய மாநிலங்களின் பெரும்பாலானவற்றுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. பல அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதித்துள்ளது.

சண்டிகரின் செவ்வாய்க்கிழமை வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குருகிராமில் நகரமே வெள்ளக்கடாக மாறி, சாலைகள் ஆறு போல காட்சியளிக்கின்றன. இதனால், பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...