கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் நடித்த ஸ்ருதிநாராயணன் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் இருப்பது நான் இல்லை, அது ஏ.ஐ வீடியோ என்று அவர் விளக்கம் அளித்தார். மேலும் “நானும் பெண் தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. நெருக்கடியான சூழலில் உள்ளேன். அதை சிலர் மோசமாக மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். எல்லா வீடியோக்களையும் இப்படி பரப்பாதீர்கள்.’’ என்று போஸ்ட் போட்டார். ஆனாலும், அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாக, அவர் தர்மசங்கடத்தில் இருப்பதாக கூறப்பட்டது. ஸ்ருதி நாராயணன் எங்கே இருக்கிறார். அவர் தரப்பு விளக்கம் என்ன என பலரும் தொடர்பு கொண்டும், அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த மீடியாவிலும் அவர் பேசவில்லை.
இந்நிலையில், சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடந்த கட்ஸ் என்ற பட ஆடியோ விழாவுக்கு, நண்பர் ஒரு பைக்கில் வந்து இறங்கினார் ஸ்ருதி நாராயணன். அட, அவரா இவர் என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். பின்னர், போட்டோ கிராபர், வீடியோகிராபர்களுக்கு தைரியமாக போஸ் கொடுத்தார். அடுத்து, விழா மேடையிலும் தைரியமாக அமர்ந்தார். ரங்கராஜ் இயக்கி, நடிக்கும் கட்ஸ் படத்தில் ஸ்ருதி நாராயணன் 2வது ஹீரோயினாக நடிக்கிறார். அதனால்தான் இந்த விழாவுக்கு வந்தார் என்று கூறப்பட்டது. உங்களுக்கு என்ன மாதிரியான கேரக்டர் என்று சிலர் கேட்க, அதை படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க என சிரித்தார். பின்னர் பாடல் வெளியீட்டுவிழா மேடையில் ஸ்ருதி நாராயணன் பேசியதாவது
‘‘கட்ஸ் பட சான்சை கொடுத்த இயக்குனர், ஹீரோ ரங்கராஜ்க்கு நன்றி. இந்த படத்தில் 2வது ஹீரோயினாக நடிச்சு இருக்கிறேன். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு வகை கேரக்டர் இருக்கும். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர்.ஆனால், படப்பிடிப்புக்கு செல்லும்போது பிளாங்க் ஆக சென்றேன். என்ன பண்ணனும், எப்படி பண்ணனும்னு டைரக்டர்தான் சொல்லிக்கொடுத்தார். . படப்பிடிப்பில் இன்ச், இன்ச் ஆக கத்து கொடுத்தாங்க. அதை கத்துக்கொடுத்த இயக்குனருக்கு நன்றி. எனக்கு சினிமா புது. ஆனாலும், சிறப்பாக நடிக்க கற்றுக்கொடுத்தார்கள். என்னை மேடையில் குறிப்பிட்டு பேசிய அனைவருக்கும் நன்றி. கட்ஸ் படத்துக்கு உங்க அனைவரின் ஆதரவு தேவை’ என்றார். பலத்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ஸ்ருதி நாராயணன் முதல் முறையாக ஒரு சினிமா மேடையில் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது