கத்தாரில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிதான் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பை. இந்த முறை எப்படியும் அவர் அர்ஜெ்்டினா அணிக்கு உலகக் க்ப்பையை வென்று தருவார் என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்த்து காத்திருக்கின்றனர். கடந்த 35 போட்டிகளில் ஒரு போட்டியில்கூட அர்ஜென்டினா தோற்க்காமல் இருப்பது அவர்களின் கனவை மேலும் பிரகாசமாக்கி உள்ளது.
ஆனால் மெஸ்ஸியோ இந்த முறை பிரேசில் அல்லது பிரான்ஸ் அணிகளுக்குதான் உலகக் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன என்று கணித்துள்ளார். “பிரேசில் மற்றும் பிரான்ஸ் அணிகளின் வீரர்கள் பல மாதங்களாக ஒரே அணியாக இணைந்து கால்பந்து போட்டிகளில் ஆடி வருகின்றனர். எனவே அந்த அணிகளுக்குதான் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கின்றன” என்று தனது கணிப்புக்கான காரணத்தையும் கூறியுள்ளார் மெஸ்ஸி.
World Cup 2022 – இந்தியாவுக்கு அவமரியாதை
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஐசிசிக்கு அதிக லாபம் சம்பாதித்துக் கொடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆனால் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அவமானம் நேர்ந்துவிட்டதாக கொந்தளிக்கிறார்கள் இந்திய ரசிகர்கள்.
விஷயம் இதுதான். உலகக் கோப்பை கிரிக்கெட்டின் பயிற்சி போட்டிக்காக பிரிஸ்பேன் சென்றுள்ள இந்திய அணியின் வீரர்கள் தங்குவதற்கு 4 நட்சத்திர ஹோட்டலில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ‘ரைட்ஸ் ஃபார்டிடிட்யூட் வேலி’ என்ற ஹோட்டலில் அவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களை 4 நட்சத்திர ஹோட்டலில் தங்கவைத்து மற்ற அணிகளின் வீரர்களை 5 நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்திருப்பது இந்திய வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீரர்களைப் போலவே ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர். இதற்கு பழிவாங்கும் வகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின்போது இந்தியாவுக்கு வரும் ஆஸ்திரேலிய வீரர்களையும் இதேபோன்று 4 நட்சத்திர ஹோட்டலில் தங்கவைக்க வேண்டும் என்கிறார்கள்.
திங்கள்கிழமை – மோசமான நாள்
வாரத்தின் 7 நாட்களில் திங்கள்கிழமைதான் மோசமான நாள் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகம் (Guinness World Record) அறிவித்துள்ளது.
வாரக்கடைசிக்கு பிறகு வரும் முதல் வேலைநாள் என்பதால், மக்கள் திங்கள்கிழமையை அதிகமாக வெறுக்கிறார்கள். அதனால் வாரநாட்களில் மிகவும் மோசமான நாளாக திங்கள்கிழமையை கருதுகிறோம் என்று இந்த கின்னஸ் உலக சாதனை புத்தகம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை அமைப்பின் இந்த ட்விட்டர் அறிவிப்புக்கு நெட்டிசன்களிடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதை பலரும் ‘லைக்’ செய்துள்ளனர். மற்றும் சிலர், ‘வாரத்தின் மோசமான நாள் திங்கள்கிழமை என்று கண்டறிய உங்களுக்கு இத்தனை நாள் ஆனதா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.