பிரபுதேவா, லட்சுமிமேனன் நடித்த ” எங் மங் சங் ” படம் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்குதே, என்ன அர்த்தம் என்ற கேட்டால், படக்குழு சொன்னது
சமீபத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள குட்பேட்அக்லீ படத்துக்கு திரைக்கதை எழுதியவர் அர்ஜூன்.எஸ்.ஜே. இவர்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். 17ஆம் நூற்றாண்டில் இந்த தொடங்குகிறது. 1980களிலும் நடக்கிறது. புரூஸ்லீ இறந்தது கூட தெரியாமல், அவரை சந்திக்க 3பேர் நினைக்கிறார்கள். சீனாவுக்கு சென்று அங்கு பிரபலமாக இருந்த குங்ஃபூ கலையை, இந்தியாவில் இருந்து செல்லும் மூன்று இளைஞர்கள்(பிரபுதேவா, ஆர்.ஜே.பாலாஜி, கும்கி அஸ்வின்) கற்கிறார்கள். அவர்கள் தங்கள் பெயரை எங் மங் சங் என மாற்றுகிறார்கள். தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். தாங்கள் கற்ற கலையை வைத்து கு என்னென்ன செய்தார்கள் என்பதை காமெடி கலந்து சொல்லியிருக்கிறோம். இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார், அவர் பரதநாட்டிய கலைஞராக வருகிறார். ஆர்.ஜே.பாலாஜிக்கும் நல்ல ரோல். இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ் காந்த், பாகுபலி பிரபாகர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரிஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தமிழ் தெலுங்கு உட்பட அனைத்து இந்திய மொழிகளிலும் ஃபான் இந்தியா படமாக இந்த ஆண்டின் கோடை கொண்டாட்டமாக மே மாதம் வர உள்ளது ஆர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் “ நான் கடவுள் ”, ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடிப்பில் “ பாஸ் என்கிற பாஸ்கரன் ”, ஜெயம் ரவி நடித்த “நிமிர்ந்து நில் ” போன்ற சூப்பர் ஹிட் படங்கள் உட்பட 50 க்கு மேற்பட்ட படங்களை தயாரித் வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரித்துள்ளது.