No menu items!

பெண்கள் குத்துச்சண்டையில் ஆண்? – ஒலிம்பிக் சர்ச்சை

பெண்கள் குத்துச்சண்டையில் ஆண்? – ஒலிம்பிக் சர்ச்சை

ஒலிம்பிக் போட்டிகளின்போது ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சர்ச்சை ஏற்படுவது வழக்கம். இந்த ஆண்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. ஆண் தன்மைக்குறிய ஹார்மோன்கள் அதிகம் கொண்ட ஒருவரை, பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க வைத்ததுதான் சர்ச்சைக்கான முக்கிய காரணம்.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இத்தாலி வீராங்கனையான ஏஞ்சலா கரினி, அலிஜீரியா நாட்டைச் சேர்ந்த இமானி கெலிப்புடன் (Imane Khelif) மோதினார்.

இப்போட்டியின் முதல் வினாடி முதலே ஆதிக்கம் செலுத்திய இமானி கெலிப், 46-வது வினாடியில் ஏஞ்சலா கரினியின் (Angela Carini) மூக்கில் ஒரு குத்துவிட்டார். இந்த குத்தில் ஏஞ்சலா கரினியின் மூக்கில் இருந்து ரத்தம் பொலபொலவென வழிந்தது. நிலைகுலைந்துபோன கரினி, இமானி கெலிப்புடன் தொடர்ந்து மோத மாறுத்தார். இதைத்தொடர்ந்து இமானி கெலிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மிக்க் குறைந்த நேரத்தில், அதாவது 46 வினாடிகளில் இந்த போட்டி முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் பங்கேற்ற இமானி கெலிப்பின் உடலில் ஆண் தன்மைக்குரிய ஹார்மோன்கள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்று இருந்தாலும், டெல்லியில் கடந்த 2023-ல் நடந்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின்போது இவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

பாலின தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால் அப்போது அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலக குத்துச்சண்டை போட்டியில் பாலின தகுதித் தேர்வில் தோல்வியடைந்த ஒருவரை எப்படி ஒலிம்பிக்கில் பெண்களுக்கான போட்டியில் பங்கேற்க வைக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து பேசியுள்ள ஏஞ்சலா கிரினி, “குத்துச்சண்டை போட்டியின்போது இமானி கெலிப் என்னை பலமாக குத்தினார். இப்படி ஒரு குத்தை என் வாழ்நாளில் வாங்கியதில்லை. அதனால் நான் போட்டியில் இருந்து விலகினேன்” என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு வீராங்கனைகள் பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒலிம்பிக்கில் பெண்களுடன் சண்டையிட இமானே கெலிப் அனுமதிக்கப்பட்டது அதிர்ச்சியூட்டும், ஆபத்தானது மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு மிகவும் அநீதியானது என்று முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் பாரி மெக்குய்கன் தெரிவித்துள்ளார்.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, “ஒரு போட்டியில், சமமான இருவர் போட்டியிடுவது முக்கியம். ஆனால் என்னுடைய பார்வையில், அது சமமான போட்டி அல்ல” என்று குறிப்பிட்டார்.

இமானி கெலிப் விஷயத்தில் விளக்கம் அளித்துள்ள சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, “முந்தைய ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளைப் போலவே, விளையாட்டு வீரர்களின் பாலினம் மற்றும் வயது அவர்களின் பாஸ்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இமானி கெலிப்பின் பாஸ்போர்ட்டில் அவர் ஒரு பெண் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் ஆட அவர் அனுமதிக்கப்பட்டார் என்று விளக்கம் அளித்துள்ளது.

இந்த தொடர் சர்ச்சைகளுக்கு நடுவில், தனது அடுத்த போட்டியில் ஹங்கேரி நாட்டு வீராங்கனையான லூகா ஹமோரியை எதிர்த்து ஆடவுள்ளார் இமானி கெலிப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...