No menu items!

குளிர்ந்த நீர் – வெந்நீர் : எதில் குளிக்கலாம்?

குளிர்ந்த நீர் – வெந்நீர் : எதில் குளிக்கலாம்?

குளியல் ஒரு இனிமையான அனுபவம். சுகமான ஒரு குளியலைப் போட்ட பிறகுதான் சிலருக்கு அந்த நாளே தொடங்கும். குளிக்கும் விஷயத்தை எல்லோரும் செய்வார்கள் என்றபோதிலும், அதைச் செய்யும் முறை மாறுபடும். கடும் குளிர்காலமாக இருந்தாலும் சிலர் குளிர்ந்த பச்சைத் தண்ணீரில்தான் குளிப்பார்கள். வேறு சிலருக்கு மே மாதத்தில்கூட வெந்நீர் தேவைப்படும். இன்னும் ஒருசிலர் மழைக்காலத்தில் வெந்நீரிலும், கோடைக் காலத்தில் குளிர்ந்த தண்ணீரிலும் குளிப்பார்கள்.

எந்த தண்ணீரில் குளிப்பது சிறந்தது?

குளிர்ந்த நீர் மற்றும் வெந்நீர் என்று நீங்கள் எந்த தண்ணீரில் குளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்கள் உடலில் மாற்றங்கள் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

குளிர்ந்த நீரில் குளித்தால்:

குளிர்ந்த நீரில், அதாவது பச்சைத் தண்ணீரில் ஒருவர் குளித்தால், அவரது உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் குளிர்ந்த நீரில் குளிப்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறதாம். அத்துடன் குளிர்ந்த நீரில் குளிப்பதால் சருமம் இறுக்கமாகும். மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். . அட்ரிலினை அதிகம் சுரக்கவைக்கும் என்றெல்லாம் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் நீங்கள் சோம்பலாக உணர்ந்தால், உடனடியாக உங்களை சுறுசுறுப்பாக்க குளிர்ந்த நீரில் குளிப்பதுதான் சிறந்த வழி என்பதும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

அப்படியென்றால் வெந்நீரில் குளிப்பது தவறா? குளிர்ந்த நீரில்தான் குளிக்க வேண்டுமா என்று கேட்கிறீர்களா?… அப்படி இல்லை. நீங்கள் வெந்நீரிலும் குளிக்கலாம். ஒருவர் தினசரி வெந்நீரில் குளித்தாலும் சில பயன்கள் கிடைக்கும்.

வெந்நீரில் குளித்தால்:

ஒருவர் மன அழுத்தத்திலோ அல்லது பதற்றத்திலோ இருந்தால், அதிலிருந்து உடனடியாக விடுபட வெந்நீரில் குளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். ஒருவர் வெந்நீரில் குளிப்பதால் அவரது தசைநார்கள் ரிலாக்ஸ் ஆகிரதாம். இதனால் டென்ஷன் குறைகிறது. மூச்சு விடுவது எளிதாகிறது. சில நிமிடங்களாவது உங்களை மறந்து இதமாக இருக்க வெந்நீர் குளியல் உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக ஒவ்வாமை சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீரில் குளிப்பது நல்லது என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

குளியலும் சருமமும்:

ஒருவர் எந்த நீரில் குளிக்கிறார் என்பதைப் பொறுத்து சம்பந்தப்பட்ட மனிதரின் சருமம் மாறும். வெந்நீரில் குளிப்பதால், உடலில் உள்ள இயற்கையான எண்ணைத்தன்மை மறைந்து சருமம் உலர்ந்துவிட வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தில் ஈரப்பதம் அப்படியே இருக்கும். அதனால் ஏற்கெனவே உலர்ந்த சருமம் கொண்டவர்கள் குளிர்ந்த நீரிலும், எண்ணைத்தன்மை மிக்க சருமம் கொண்டவர்கள் வெந்நீரிலும் குளிக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

விளையாட்டு வீர்ர்கள்:

விளையாட்டு வீர்ர்கள் தங்கள் கடுமையான பயிற்சிக்கு பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அப்படி குளிப்பதால் பயிற்சியின்போது இழந்த புத்துணர்ச்ச்சியை அவர்கள் உடனடியாக பெற முடியும். அதேசமயம் வாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீரில் குளிப்பது நல்லது என்பது மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கருத்தாக உள்ளது.

ஆக குளிர்ந்த நீரோ.. வெந்நீரோ உங்கள் உடலுக்கு எந்த நேரத்தில் எது தேவை என்று கருதுகிறீர்களோ அந்த நீரில் குளிக்கலாம். ஆனால் குளிப்பது முக்கியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...