No menu items!

சார்லஸ் முடிசூட்டு விழா – எப்படி நடக்கப் போகிறது?

சார்லஸ் முடிசூட்டு விழா – எப்படி நடக்கப் போகிறது?

இளவரசர் சார்லஸ் முழுமையான மன்னராக பொறுப்பேற்கிறார்.

70 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் ஒரு முடி சூட்டு விழா நடக்கப் போகிறது.

எட்டு மாதங்களுக்கு முன்பு – செப்டம்பர் 8 2022இல் இங்கிலாந்தின் மகாராணி எலிசபெத் மறைந்தார்.

உடனே அவரது மகன் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னர் பொறுப்புக்கு வந்தார். ஆனால் அதிகாரப்பூர்வமாக மூடி சூட்டப்படவில்லை. மே 6ஆம் தேதி இங்கிலாந்து மன்னராக சார்லஸ் அதிகாரப்பூர்வமாக முடிசூடப்படுகிறார்.

மன்னர் முடி சூட்டல் கொண்டாட்டங்களுக்கு இங்கிலாந்து தயாரகிக் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதிலுமிருந்து முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் 2000 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

1952இல் எலிசபத் ராணி முடி சூட்டலுக்கு 8000 பேருக்கு அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

தலைவர்கள், பிரபலங்கள் மட்டுமில்லாமல் இங்கிலாந்தில் தன்னலமற்ற மக்கள் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 850 சாமானியருக்கும் முடி சூட்டல் நிகழ்வில் கலந்துக் கொள்ள அழைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்து நேரம் காலை 11 மணிக்கு சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடி சூட்டப்படுவார்.

பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்மினிஸ்டர் அபே (Westminster Abbey) ஆலயத்துக்கு 6 குதிரைகள் பூட்டிய தேரில் (Diamond Jubilee State Coach) சார்லஸ் அழைத்துச் செல்லப்படுவார். இந்தத் தேர் அங்கு அவருக்கு முடிசூடப்படும்.

முடி சூட்டலின்போது அவருக்கு 360 வருட பழமையான தங்க கிரீடம் அணிவிக்கப்படும். இந்த கிரீடத்தின் எடை இரண்டே கால் கிலோ. கிரீடம் முழுவதும் விலை உயர்ந்த நவரத்தின கற்கள்.

முடி சூட்டல் முடிந்ததும் சார்லசும் அவரது மனைவி கமிலாவும் 8 குதிரைகள் பூட்டிய சிறப்புத் தேரில் (Gold State Coach) மன்னர் சார்லஸ் பக்கிங்காம் அரண்மனைக்கு ஊர்வலமாக அழைத்துவரப்படுவார்.

எலிசபெத் காலத்தில் இந்த ஊர்வலம் ஐந்து மைலாக இருந்தது, இப்போது சார்லசுக்கு ஒன்றரை மைலாக குறைக்கப்பட்டிருக்கிறது.

சார்லசுக்கு இரண்டு மகன்கள். இளவரசர் வில்லியம், இளவரசர் ஹாரி. இவர்களில் இரண்டாவது ஹாரி அரச வாழ்க்கையைத் துறந்து அமெரிக்காவில் வசிக்கிறார். அப்பா மன்னராவதைப் பார்க்க அவர் மட்டும் வருகிறார். மனைவி, குழந்தைகள் கலிஃபோர்னியாவிலேயே இருப்பார்களாம். காரணம் அன்று ஹாரியின் மகனுக்குப் பிறந்தநாள். அந்தக் கொண்டாட்டத்துக்காக அவர்கள் முடிசூட்டும் நிகழ்வுக்கு வரவில்லை. ஹாரியும் விழாவில் கலந்துக் கொண்டு உடனடியாக அமெரிக்கா திரும்புகிறார் என்று செய்திகள் சொல்லுகின்றன. அரசக் குடும்பத்திலிருந்து ஹாரி விலகி இருப்பதால் அவர் அரசக் குடும்பத்துடன் பக்கிங்காம் அரண்மனைக்கு செல்வாரா என்பது சந்தேகம்.

கமீலாவுக்கு குயின் மேரியின் கிரீடம் சூட்டப்படும். இந்தக் கிரீடத்தில் 2200 வைரங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன.

இண்டர்நெட், சமூக ஊடகங்கல் வந்தப் பிறகு நடக்கும் முதல் மன்னர் மகுடம் சூட்டும் நிகழ்ச்சி என்பதால் மன்னரின் கிரீடம் குறித்த ஒரு எமோஜி ட்விட்டரில் வெளியிடப்படுகிறது.

விழாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவில்லை. அவரது மனைவி ஜில் பைடன் வருகிறார்.

முடி சூட்டு விழாவுக்கு இந்தியாவின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் செல்கிறார்.

கேட்டி பெரி, லயனல் ரிச்சி போன்ற பாப் பாடகர்கள் பாடல்கள் பாடுகிறார்கள். அரச விருந்துக்கு இந்திய நடிகை சோனம் கபூர் அழைக்கப்பட்டிருக்கிறார்.

சார்லஸ் முடிசூட்டல் விழாவுக்கான செலவு முழுவதையும் இங்கிலாந்து அரசு எடுத்துக் கொள்கிறது. எலிசபெத் ராணியின் முடி சூட்டலுக்கு 15 லட்சம் பவுண்டுகள் செலவானது. சார்லஸ் பதவியேற்புக்கு நாலரைக் கோடி பவுண்டுகள் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து பல பொருளாதார சிக்கல்களில் சிக்கியிருக்கும்போது இந்த செலவு தேவையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...