No menu items!

நேபாளத்தில்  Social Media மீதான தடை வாபஸ்!

நேபாளத்தில்  Social Media மீதான தடை வாபஸ்!

சமூக வலை​தளங்​களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்​ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

இதனையடுத்து இந்த தடை உத்தரவை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது.

பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட பதிவு செய்​யப்​ப​டாத 26 சமூக வலை​தளங்​களை நேபாள அரசு முடக்​கி​யது. இதனால், கடந்த வெள்​ளிக்​கிழமையி​லிருந்து அவற்றை பயன்​படுத்த முடி​யாமல் இளைஞர்​கள் தவித்து வந்தனர்.

இதையடுத்து சமூக வலை​தளங்​கள் மீதான தடையை விலக்க கோரி​யும், நாட்​டில் பரவி​யுள்ள ஊழல் கலாச்​சா​ரத்​துக்கு முற்​றுப்​புள்ளி வைக்கக் கோரி​யும் நேற்று ஆயிரக்​கணக்​கான இளைஞர்​கள் ஒன்று திரண்டு தலைநகர் காத்​மாண்​டு​வில் பேரணி நடத்​தினர். அப்​போது நியூ பனேஷ்வரில் நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே போடப்​பட்​டிருந்த தடுப்​பு​களை தாண்டி போ​ராட்​டக்​காரர்​கள் உள்ளே நுழைய முயன்​றனர். நேபாள பிரதமர் சர்மா ஒலி வீட்​டின் மீது கற்​களை வீசி எரிந்​தும் தாக்​குதல் நடத்​தினர்.

இதையடுத்​து,போ​ராட்​டக்​காரர்​களுக்​கும் பாது​காப்பு படை​யினருக்​கும் இடையே மோதல் மூண்​டது.பாது​காப்பு படை​யினர் கண்​ணீர் புகை குண்​டு​களை வீசி​யும், ரப்​பர் தோட்​டாக்​களால் சுட்​டும், தண்​ணீரை பீய்ச்​சி​யடித்​தும் போ​ராட்​டக்​காரர்​களை கலைக்க முயன்​றனர். இந்த கடும் மோதலில் 19 பேர் உயி​ரிழந்​தனர். 200-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர்.

நாட்​டின் பல்​வேறு பகு​தி​களில் போ​ராட்​டக்​காரர்​களுக்​கும், போலீ​ஸாருக்​கும் இடையே மோதல் மூண்​டது. இதையடுத்து பல இடங்​களில் ஊரடங்கு உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. கலவரம் பரவி வரு​வதையடுத்து இந்​தி​யா-நே​பாளம் எல்​லை​யில் விழிப்​புடன் இருக்க அதி​காரி​களுக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

கடந்த ஆண்டு செப்​டம்​பரில் நேபாள உச்ச நீதி​மன்​றம் வழங்​கிய தீர்ப்பை தொடர்ந்​து, சமூகவலைதள நிறு​வனங்​கள் பதிவு செய்​ய​வும், குறைதீர்ப்பு அதி​காரியை நியமிக்​க​வும் ஏழு நாட்​கள் அவகாசம் வழங்க நேபாள அமைச்​சரவை கடந்த மாதம் முடிவு செய்​தது. இந்த நிலை​யில், பதிவு செய்​து​கொள்​ளாத பேஸ்​புக், யூ டியூப், எக்ஸ் உள்​ளிட்ட26 சமூக வலை​தளங்​களை கடந்த வெள்​ளிக்​கிழமை முடக்கி நேபாள அரசு நடவடிக்கை மேற்​கொண்​டது. ஆன்​லைன் மோசடி மற்​றும் பண மோசடி ஆகிய​வற்றை சுட்​டிக்​காட்டி இதேபோன்​று, கடந்த ஜூலை​யில் டெலிகி​ராம் மெசேஜ் செயலியை நேபாள அரசு தடை செய்​தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்பார்க்காத அளவில் ஏராளமான இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால், சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நேபாள அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதனை அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிரித்வி சுப்பா உறுதி அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...