தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதற்கு சரியான ஹீரோயின்கள் இல்லாததால் ரொம்பவே வறட்சியில் தவிக்கிறது கோலிவுட் வட்டாரம்.
நயன்தாரா தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார். ராஷ்மிகா விஜய் படத்திற்கு பிறகே அடுத்தப்படம். ஹிட்டானால் சம்பளத்தை ஏற்றிவிட்டு பேசலாம் என்கிறார். கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கு ரெடி என்று சொன்னாலும், மெலிந்துப் போய் பரிதாபமாக இருப்பதால் கால்ஷீட் டைரி ஃபுல் ஆகாமலே தவிக்கிறார். சமந்தா ஹிந்திப் பக்கம் போக முயற்சிக்கிறார். பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்து ஃப்ளாப்.
இப்படி ஆளாளுக்கு ஏதோ ஒரு பாலிஸியிலோ, பஞ்சாயத்திலோ சிக்கி இருப்பதால்தான் இப்படியொரு வறட்சி நிலவுகிறது.
இதனால் ’கொடி’ படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரனை இங்கே நடிக்க அழைத்திருக்கிறார்கள்.
’ப்ரேமம்’ படத்தின் மூலம் கிடைத்த மவுசை வைத்து தமிழில் கிடைத்த ’கொடி’ பாக்ஸ் ஆபிஸில் அவ்வளவாக பறக்கவில்லை என்பதால் யாரும் அவரைப் பற்றி யோசிக்கவில்லை.
இப்போது மீண்டும் ‘தமிழில் நடிக்க ரெடியா’ என்று கேட்டதற்கு, கண்டிப்பாக என்றவர் சட்டென்று சொன்ன வார்த்தைகள்தான் தயாரிப்பாளர்களைப் பதற வைத்திருக்கிறது.
‘இப்போ ஒண்ணு வாங்குறேன். ஒன்னரை கொடுத்தா ஒகே. இல்லைன்னா சாரி’ என்று சொல்ல, திரும்பிப் பார்க்காமல் சென்னைக்கு கிளம்பிவந்திருக்கிறது தயாரிப்பாளர் வட்டாரம்.
வெறும் 150 நாட்களா.. ஷாக்கான எஸ்.எஸ். ராஜமெளலி
இன்று சினிமாவில் எல்லோரும் தூக்கிப்பிடித்து கொண்டிருக்கும் பான் – இந்தியா பிஸினெஸ்ஸை நம்மூர் கே. பாலசந்தர், மணிரத்னம் ஏற்கனவே சாதித்து காட்டியிருந்தாலும், பாகுபலி வரிசைப் படங்களுக்குப் பிறகே அதுபற்றி அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அந்தளவிற்கு ராஜமெளலி ஒரு ட்ரெண்டை உருவாக்கி விட்டார்.
ஆனால் அந்த ராஜமெளலியே இப்போது அதிர்ச்சியில் உறைந்துப் போயிருக்கிறார். காரணம் பொன்னியின் செல்வன்.
பாகுபலியின் முதல் பாகம் மட்டுமில்லாமல் இரண்டாம் பாகத்தையும் எடுக்க ஆண்டுக்கணக்கில் ஆனது. ஆனால் பொன்னியின் செல்வனை வெறும் 150 நாட்களில் ஷூட் செய்து முடித்திருக்கிறது மணிரத்னம் டீம்.
ஒரு வரலாற்றுப் படம். பெரிய பட்ஜெட். மாபெரும் நட்சத்திர பட்டாளம். இப்படி பல சுமைகள் தலை மீது இருந்தாலும், பக்காவான திட்டமிடல், ஷூட்டிங்கின் போது நட்சத்திரங்கள், காஸ்ட்யூம்கள், ஷூட்டிங்கின் போது பயன்படுத்தும் லைட்டுகள், கேமராக்கள், லென்ஸ்கள், ஜெனரேட்டர்கள் என அனைத்தையும் பக்காவாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்ற போக்குவரத்தை மிகச் சரியாக கையாண்டதால்தான் மணிரத்னத்தால் மிக விரைவாக ஷூட் செய்து முடிக்க முடிந்திருக்கிறது.
இந்த யுக்தியை கேட்டு ஆச்சர்யப்பட்ட ராஜமெளலி தனது அடுத்தப்படங்களில் மணி ரத்னத்தின் பாணியைப் பின்பற்ற போவதாக கூறியிருக்கிறார்.
ஆஸ்பத்திரியில் திபீகா படுகோன் – அப்டேட்
கடந்த நான்கு மாதங்களில் இரண்டு முறை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் திபீகா படுகோன்.
காரணம் மன அழுத்தம் என்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதம் ஹைதராபாத்தில் இருக்கும் ரமோஜி ராவ் ஃப்லிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தார் திபீகா. திடீரென அவருக்கு இதயத்துடிப்பு சரசரவென அதிகமாகி இருக்கிறது. மேலும் அசெளகரியம் போல் இருப்பதாக அவர் சொல்ல, ஹைதராபாத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனைக்கு திபீகா பரபரக்க அழைத்து சென்றிருக்கிறார்கள்.
அங்கு அவரை பரிசோத்த மருத்துவர்கள் சில மணி நேரங்களில் ஆஸ்பத்திரியிலிருந்து அனுப்பி விட்டார்கள் என்ற செய்தி பரவியது. ஆனால் திபீக நடித்து வந்த தெலுங்குப்பட யூனிட் இந்த செய்தியை மறுத்தது.
இந்நிலையில் கடந்த திங்கள் அன்று இரவு மீண்டும் அசெளகரியம் இருப்பது போல் உணர்ந்திருக்கிறார் திபீகா. இதனால் பதட்டமடைந்த அவரது பணியாளர்கள் மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி ஹாஸ்பிடலுக்கு பதைபதைப்புடன் அழைத்து வந்திருக்கிறார்கள்.
திபீகா படுகோனுக்கு மளமளவென பல பரிசோதனைகளை மேற்கொண்டது மருத்துவர்கள் குழு. இந்த அசெளகரியத்திற்கு என்ன காரணம் என்பது உடனடியாக தெரியவில்லை. சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நன்றாக தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது.
2018-ல் ரன்வீரை காதலித்து திருமணம் செய்து கொண்ட திபீகா படுகோனுக்கு இப்போது வயது 36. திருமணமான பின்பும் தொடர்ந்து ஹிந்தி தெலுங்குப் படங்களில் தொடர்ந்து இடைவிடாமல் நடித்துவருவதால் உண்டான மன அழுத்தமே இந்த அசெளகரியமான உணர்வுக்கு காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள்.