கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் ஹீரோ தர்மன் தனது அம்மா தங்கம் மற்றும் தங்கையோடு அங்குள்ள மலைக்காட்டில் வாழ்ந்து வருகிறார். தனது மகனை வட்டிக்கு கடன் வாங்கி டிப்ளமோ வரை படிக்க வைக்கிறார் தங்கம்.
ஆனால், கல்லூரியில் சில காரணங்களுக்காக தர்மனை சஸ்பெண்ட் செய்கின்றனர். இந்த சூழலில், கடன் கொடுத்தவர் பணம் கேட்டு மிரட்ட, இதனால் கேரளாவிற்கு வேலைக்குச் செல்கிறார் தர்மன். உடன் அவரது நண்பர்கள் இருவரும் செல்கின்றனர்.
இதற்கிடையே, சாகவிருந்த நாய் ஒன்றை காப்பாற்றி வளர்த்து வருகிறார் . அந்த நாயையும் தன்னுடனே கேரளாவிற்கு அழைத்துச் செல்கிறார் தர்மன்.
கேரளாவில் இவர் வேலைக்குச் செல்லும் ரப்பர் தோட்டத்தின் முதலாளியாக இருப்பவர் தான் செம்பன் வினோத். சிறு வயதில் இருந்து மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, பெரும் பணக்கரணாகி அப்பகுதியின் நகராட்சி தலைவராக இருக்கிறார். திருமணமாகி பல வருடங்கள் கழித்து பிறந்த ஒரு பெண் குழந்தை இவருக்கு இருக்கிறார்.
அந்த குழந்தை மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார் செம்பன் வினோத். ஒருமுறை வீட்டில் வைத்து நாய் ஒன்று குழந்தையை கடித்து விட, இதனால் கோபம் கொண்ட செம்பன் வினோத், தனது அடியாட்களிடம் அந்த ஏரியாவில் ஒரு நாயும் இருக்கக் கூடாது அனைத்தையும் கொன்று விடுமாறு கூறி விடுகிறார்.
அடியாட்களும் கையில் கிடைக்கின்ற நாய்கள் அனைத்தையும் கொன்று குவிக்கின்றனர். அப்படியாக, தர்மனின் நாயையும் பிடித்துச் செல்கின்றனர். நாயை கண்டுபிடித்து அதனை மீட்க செல்கிறார் தர்மன்.
அப்போது நடந்த சண்டையில், செம்பன் வினோத்தின் வலது கையாக இருந்த சரத் அப்பாணியின் கையை துண்டாக வெட்டி விடுகிறார் தர்மன்.
கையை இழந்தவர் குணாநிதி மற்றும் அவரது கூட்டத்தை கொலை செய்ய துடிக்க, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் குணாநிதி, காட்டு வழியாக பயணம் மேற்கொள்கிறார். அவர்களை துரத்திவருகிறது கேரளா கும்பல். அவர்களிடம் தப்பித்தார்களா ? இல்லையா ? என்பதே அலங்கு படத்தின் கதை.
அலங்கு என்பது நாய் பற்றிய பல பெயர்களில் ஒன்று. நாயகனாக குணாநிதி மலைவாழ் மக்களின் முகச்சாயலுடன் படம் முழுவது கதாபாத்திரத்தை பிரதிபலிப்பது போலவே வருகிறார். அம்மாவின் மீது வைத்திருக்கும் பாசமும், நாயை அரவணைக்கும் இடத்திலும் இயல்பாக அவருக்கு நடிப்பு வருகிறது. நல்ல தேர்வு.
காளி வெங்கட் நாயகனின் தாய் மாமாவாக வந்து மனதில் நிறைகிறார். தப்பித்து குகைக்குள் இருக்கும்போது பேசும் காட்சியில் உருக்கம். நாயகனின் அம்மாவாக ஸ்ரீரேகா நடிப்பில் மிரட்டுகிறார். மலைவாழ் மக்களின் சாயலுடன் கண்களாலேயே உணர்வுகளை கடத்துகிறார். அவர் வரும் காட்சிகள் படத்தின் சீரியஸ் தன்மையை வெளிப்படுத்துகிறது. தமிழில் அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
மலையாள நடிகர் செம்பன் வினோத் கொற்றவை படத்தில் முக்கிய பாத்திரங்களாக வருகிறார்கள். குழந்தைக்கு ஏதாவது நடந்தால் கொதித்துப் போகும் செம்பன் வினோத் கதையில் ஏதோ பெரிதாக செய்யப்போகிறார் என்று காத்திருந்தால் பெரிய ஏமாற்றத்திற்கு ஆளாவீர்கள்.
சரத் அப்பானி, சவுந்தர்ராஜா, ஸ்ரீரேகா, சண்முகம் முத்துசாமி, ரெஜின் ரோஸ், இதயக்குமார், மாஸ்டர் அஜய், கொற்றவை, தீக்ஷா, மஞ்சுநாதன் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இயக்குனர் அஜீஷ் புதிய கதைக்களத்தில் கையில் எடுத்த வகையில் கவனிக்க வைத்திருக்கிறார். காட்கள் அனைத்தும் இதுவரை பார்த்திராத காட்சிகளாக வருகிறது. முதல் பாதி விறுவிறுப்பாக வித்தியாசமான திரைக்கதையில் படம் செல்கிறது. இரண்டாம் பாதியில் சில இடங்களில் சினிமாத்தனமாக இருக்கிறது. நாயை மையமாக வைத்துத் தொடங்கும் கதை எங்கெங்கோ சென்று பழி வாங்கும் கதையாக மாறிப்போனதை இயக்குனர் எஸ்.பி. சக்திவேல் கவனிக்கவில்லை.
படத்தில் பின்னணி இசையை சிறப்பாக செய்திருக்கிறார் அஜீஷ். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.