நடிகர் அஜித்குமார், சர்வதேச கார் பந்தயங்களில் இப்போது பங்கேற்று வருகிறார். துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்குமாரின் அணி, 3-வது இடம் பிடித்தது. தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் 3-வது இடமும் பெல்ஜியத்தில் நடந்த ஸ்பா பிரான்ஸ் ரேஸில் இரண்டாவது இடமும் பிடித்தது.
கடந்த வாரம் நெதர்லாந்தில் நடந்த ஜிடி 4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்ற அவர், அடுத்து வரும் 24-ம் தேதி இத்தாலியில் நடக்கும் மிசானோ வேர்ல்டு சர்க்கியூட் ரேஸில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே, தனது ரோல் மாடலும், மறைந்த கார் ரேஸ் வீரருமான பிரேசிலை சேர்ந்த அயர்டன் சென்னா சிலைக்கு அஜித்குமார் அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த 1994-ல் நடைபெற்ற சான் மேரினோ கிராண்ட் பிரிக்ஸ் கார் ரேஸில் நடந்த விபத்தில் அயர்டன் சென்னா உயிரிழந்தார். அவர் மறைவு பார்முலா-1 பாதுகாப்பு விதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தியது.