தமிழ் சினிமாவில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பொருத்தமான உருவமாகவும் நடிப்பில் நல்ல அனுபவம் உள்ளவராகவும் இருப்பவர் மணிகண்டன் காலா, குட் நைட் உட்பட பல படங்களில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். நடிப்பு பயிற்சி முறைப்படி கற்ற அவர் தற்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் சினிமா பின்னணி இல்லாத ஒரு குடும்பத்திலிருந்து வந்து வெற்றிகரமாக இயங்கி வருவதால் தனக்கு முன்னுதாரணமாக அஜித் இருக்கிறார் என்று மனம் திறந்து பேசியிருப்பது வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது…
கடின உழைப்பு, விடாமுயற்சியின் மூலமாக சினிமாவில் காலூன்றி வந்தவர் அஜித் ஒருவர் மட்டுமே. அவருக்கு எந்தவித சினிமா பின்புலமும் இல்லை. 32 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி படங்களையும் கொடுத்திருப்பார், எத்தனையோ தோல்வி படங்களையும் கொடுத்திருந்தார். அதுமட்டுமின்றி தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என்று எப்போதும் சைலண்டாக இருப்பார். ரசிகர் மன்றமும் கிடையாது.
ரசிகர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் அன்பும், அக்கறையும் கொண்ட நல்ல மனிதர். சக நடிகர், நடிகைகள் போற்றும் அளவிற்கு ஒரு நல்ல நடிகராக இன்று வரையில் சினிமாவில் தன்னை நிரூபித்துக் காட்டியிருக்கிறார். எத்தனையோ ரசிகர்களுக்கு தன்னை ஒரு ரோல் மாடலாக அடையாளப்படுத்தியிருக்கிறார். அதற்கு சமீபத்தில் துபாயில் நடைபெற்ற 24ஹெச் சீரிஸ் கார் ரேஸ் ஒரு சான்று.
சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னுடைய ஃபேஷனான கார் ரேஸில் கலந்து கொண்டு அதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் கடினமாக உழைத்து முறையாக பயிற்சியும் செய்த பிறகு கார் ரேஸில் பங்கேற்றார். அதில் பயிற்சியின் போது எதிர்பாராத விபத்தையும் சந்தித்தார். எனினும், அதிலிருந்து பின் வாங்காமல் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார்.
சினிமாவில் எத்தனையோ வெற்றி படங்களை கொடுத்திருந்த போது இல்லாத மகிழ்ச்சியை கார் ரேஸில் வெற்றி பெற்ற பிறகு வெளிப்படுத்தினார். அவர் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்ல. இந்திய நாட்டின் தேசிய கொடியை கையில் ஏந்திய படியே மகிழ்ச்சியின் ஒவ்வொரு நிமிடத்தையும் கொண்டாடினார். வெற்றிக்கு பிறகு அஜித் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.
கடந்த ஆண்டு அஜித்தின் தரிசனம் கிடைக்காத ரசிகர்களுக்கு இந்த ஆண்டு டபுள் மடங்கு டிரீட் கொடுத்து வருகிறார். இந்த ஆண்டு அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாக இருக்கிறது. அஜித் நடித்த விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் தான் திரைக்கதை எழுத்தாளரும், நடிகருமான மணிகண்டன் அஜித் தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷ் என்று கூறியுள்ளார்.