உலகிலேயே சுறுசுறுப்பான மனிதர்கள் என்று பெயர் எடுத்தவர்கள் ஜப்பானியர்கள். ஓய்வில்லாமல் அவர்கள் உழைத்ததால்தான் இரண்டாம் உலகப் போருக்கு பிறகு மிகப்பெரிய அளவில் அழிவைச் சந்தித்த ஜப்பான் இன்று பொருளாதாரத்தில் மற்ற நாடுகளைவிட உயர்ந்து நிற்கிறது.
தங்கள் வாழ்க்கையில் சோம்பேறித்தனத்தை உதறித் தள்ளி, சுறுசுறுப்பாக இருக்க ஜப்பானியர்கள் சொல்லும் 8 விஷயங்கள் என்ன என்று பார்ப்போம்.
1.ikigai
வாழ்க்கையின் லட்சியத்தை கண்டுபிடியுங்கள்.
தினமும் காலையில் எழும்போது அந்த நாளை அர்த்தமாக்குவது எப்படி என்று யோசியுங்கள். அன்றைய நாளுக்கான ஒரு லட்சியத்தை வகுத்துக் கொள்ளுங்கள். அதை செயல்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தை உருவாக்குங்கள்.
2.kaizen
ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் ஒரு சிறிய முன்னேற்றத்தையாவது காண வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.
அந்த முன்னேற்றத்துக்காக நாம் ஒரே நாளில் பல விஷயங்களை செய்யவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு நாளும் சில விஷயங்களை துல்லியமாக செய்து முடித்தால் போதும்.
3.pomodoro technique
ஒவ்வொரு முறையும் 25 நிமிடங்கள் தொடர்ந்து உழைத்தால், 5 நிமிடங்கள் ஓய்வு எடுங்கள். நாள்முழுவதும் உற்சாகமாக வேலை பார்க்க்க்கூடிய ஆற்றலை இந்த 5 நிமிட ஓய்வு உங்களுக்கு கொடுக்கும்.
4.hara hachi bu
எப்போதும் வயிறு முட்ட சாப்பிடாதீர்கள்.
உங்கள் வயிறு 80 சதவீதம் நிரம்பும் அளவுக்கு மட்டும் சாப்பிடுங்கள். இதனால் உங்கள் உடல் லேசாக இருப்பதுடன் நாள் முழுக்க சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள்.
5.shoshin
ஒரே மாதிரியான வேலையை தினமும் செய்தாலும், அதை முதல் முறையாக செய்பவரைப் போன்ற உற்சாகத்துடன் செய்யுங்கள். நாம் செய்யும் வேலையில் தவறு ஏற்படுமோ என்று பயப்படாதீர்கள். எதையும் துணிச்சலுடன் முயற்சித்துப் பாருங்கள்.
எந்த வேலையையும் முயற்சித்து பார்க்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் அணுகுங்கள்.
6.wabi – sabi
வாழ்க்கையில் தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. அதனால் வேலையில் ஏதாவது தவறுகளைச் செய்தால் அதற்காக கவலைப்படாதீர்கள். எப்போதும் முழு மன அமைதியுடன் இருங்கள்.
7.forest bathing
மன அமைதிக்காக அடிக்கடி இயற்கையுடன் நேரத்தை செலவிடுங்கள். பூங்காக்களில் நல்ல காற்றுள்ள சூழலில் நடப்பது, வாரம் அல்லது மாதத்துக்கு ஒரு முறையாவது இயற்கை சூழ்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள்.
8.kakeibo
சேமிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் வாழ்க்கையில் சோர்வடைவதற்கு உங்கள் பொருளாதார நிலையும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். அதற்கு நீங்கள் சிக்கனமாக இருந்து தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தி, பணத்தை சேமிப்பது முக்கியம்.
பொருளாதார நிலையில் வலுவாக இருக்கிறோம் என்பதே ஒருவரை வாழ்க்கையில் உற்சாகமாக வைத்திருக்கும்.