‘ஈரம்’ அறிவழகன் இயக்கத்தில் ஆதி, லட்சுமிமேனன், சிம்ரன், லைலா உட்பட பலர் நடிக்கும் படம் ‘சப்தம்’. இது பேய்க்கதையா என்று இயக்குனரிடம் கேட்டால், ‘‘தண்ணீர் பின்னணியில் உருவான பேய்ப்படம் ‘ஈரம்’. அந்த படத்தின் கதையும், காட்சிகளும் மற்ற பேய் படங்களில் இருந்து மாறுபட்டு இருந்தன. சப்தம் படத்தின் கதை, தலைப்புக்கு ஏற்ப சப்தங்களுக்கும், பேய்களுக்குமான தொடர்பை சொல்கிறது. இந்த வகை கதைக்கு திரைக்கதை எழுதுவது, அதை படமாக்குவது சவாலானது. பேய் வரும் காட்சிகளில் உருவாகும் சப்தங்களை மிகவும் கவனத்துடன் உருவாக்கினோம். பேய் படங்களில் வவ்வால்கள் அதிகம் வரும், இடி, மின்னல் , பாழடைந்த பங்களா ஆகியவை இருக்கும். இந்த படத்தில் வவ்வால்களுக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.
இந்தியாவில் சப்தங்களை வைத்து பேய்களை கண்டுபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். நவீன கருவிகள் மூலம், அவர்கள் பேய்களுடன் பேசுவார்கள் அல்லது பேய்கள் குறித்து ஆராய்ச்சி செய்வார்கள். அவர்களுக்கு பாராநாமல் இன்வெஸ்டிகெட்டர் என்று பெயர்.இப்படிப்பட்டவராக ஹீரோ ஆதி வருகிறார். அவர் எந்த பேயை அறிவியல் பூர்வமாக அணுகிறார். அந்த பேய்க்கு என்ன பிரச்னை, அது எப்படி தீர்ந்தது என்பதை கமர்ஷியலாக சொல்லியிருக்கிறேன். ஈரம் என்ற படத்துக்குபின், இத்தனை ஆண்டுகளுக்குபின் ஆதியுடன் இணைவதால் இந்த கதை மாறுபட்டதாக இருக்கும். பயம் தவிர, ஒரு உணர்வுப்பூர்வமான விஷயமும் கதையில் இருக்கும்’’ என்றார்
‘‘ஈரம்2தான் சப்தம் கதை என்று பேசப்படுகிறதே’’ என்று கேட்டதற்கு, ‘‘அது தவறான கருத்து, ஈரம் வேறு. சப்தம் வேறு. என் குரு நாதர் ஷங்கர்சாரின் எஸ் பிக்சர்ஸ் எடுத்த படம் ஈரம். ஆகவே, அடுத்த பாகத்தை அவர்களுக்காகவே இயக்குவேன். ஈரம்2 கதைதான் சப்தம் என்று சொல்லி பார்வையாளர்களை ஏமாற்ற விரும்பவில்லை. ஈரம்2 போடலாம், பிஸினஸ் அதிகரிக்கும் என்றார்கள். அது தவறு என்றேன். ஈரம் ’’ என்றார்.
‘‘இந்த படத்தில் சிம்ரன், லைலா என 2 ஹீரோயின்கள் இருக்கிறார்களே’’ என்தற்கு, ‘ஆம், கதையின் மீதான நம்பிக்கையில் இந்த கதைக்குள் வந்தார்கள். இரண்டுபேருக்கும் சஸ்பென்ஸ் ஆன கேரக்டர். அதனால், அவர்கள் படத்தை பற்றி பேசவில்லை. படம் வெளியான பின் பேசுவார்கள். இப்பவெல்லாம் ஹாரர் படங்களில் காமெடி ஜானர் அதிகமாகிவிட்டது. சிரிக்க வைக்க பேயை பயன்படுத்துகிறார்கள். ஆனால், சப்தம் சீரியசான பேய்க்கதை. நிறைய புத்தகம், டாக்குமென்ட்ரி பார்த்து இந்த கதையை உருவாக்கினேன். பல உண்மை் சம்பவங்களின் தொகுப்பாக இந்த படத்தை பார்க்கலாம். தமன் இசையமைப்பது படத்துக்கு பலம். இந்த படத்தின் சப்தம், பார்வையாளர்களை டிஸ்டர்ப் பண்ணாது. ஆனால், சைக்காலஜிகலாக மிரட்டும். ’’
என்றார்.
ஹீரோ ஆதி பேசுகையில் ‘‘நான் தமிழ் படங்களிலும் நடிக்கிறேன். தெலுங்கிலும் நடிக்கிறேன். என் வீடு சென்னையில்தான் இருக்கிறது. கிளாப், மரகதநாணயம் போன்ற படங்களின் இயக்குனர்கள் புதுமுகங்கள். நான் அவர்களின் அதிகம் கதை கேட்கிறேன். நல்ல கதைகள் கிடைத்தால் தமிழில் அதிகம் படம் பண்ணுவேன். தமிழில் வாய்ப்பு குறைவாக வருகிறது. நான் ஓடிக்கொண்டே இருக்கிறேன். ஹாரர் படம் என்றாலே ஆதியா என்று கேட்கிறார்கள். ஈரம் படத்தில் நடித்ததால் இந்த கூட்டணி தொடர்கிறது. இந்த படத்தில் நான் பேய் ஆக நடிக்கவில்லை. சில ஆவிகள் நம்முடன் பேச விரும்பும். அது, என் கேரக்டருடன் ஏன் பேச ஆசைப்படுகிறது.