தமிழ் நாட்டிலிருந்து பிழைப்புத்தேடி மலேசியாவுக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கு ஏற்கனவே குப்பை அள்ளும் வேலை செய்து வரும் யோகிபாபுவிடம் அடைக்கலம் ஆகும் விஜய், அங்கிருந்தபடியே பணம் சம்பாதிக்க திட்டம்போடுகிறார்.
லோக்கலில் இருக்கும் ஸ்மக்லிங் தாதாவிடம் பந்தயம் கட்டி 2 கோடி கடனாளி ஆகிறார். கூடவே காதலி ருக்மணியை குடிகார தந்தையிடமிருந்து மீட்க வேண்டிய நிர்பந்தம் வருகிறது. இதனால் மலேசியாவில் இருக்கும் வங்கியை கொள்ளை அடித்து விட்டு தப்பிக்கிறார். போலீஸ் அவரை எப்படி பிடிக்கிறது. விஜய் சேதுபதி நினைத்தது நடந்ததா என்பதை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆறுமுககுமார்.
விஜய் சேதுபதி வழக்கமான பில்டப்புகளுடன் நடித்திருக்கும் கமர்சியல் படம் பல காட்சிகளில் காமெடியும் செண்டிமெண்டும் சேர்ந்து இருக்கிறது. இதனால் படம் வேகமாக நகர்கிறது. நகைச்சுவைக்கு யோகிபாபு. இந்த படத்தில்தான் அவரை முழுமையாகவும் நகைச்சுவையுடனும் ரசிக்க முடிகிறது. பிரித்விராஜிடம் சிக்கி தவிக்கும் ருக்மனி முதல் படத்திலேயே ஸ்கோர் பண்ணுகிறார்.
பொழுது போக்கு மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் ரசித்து விட்டு வரலாம். லாஜிக் பார்த்தால் ஏகப்பட்ட ஓட்டைகள். ஆனாலும் விஜய் சேதுபதியின் ஸ்டைல் யோகிபாபுவின் காமெடி, ருக்மனி என ரசிக்க பல விஷயங்கள் இருப்பதால் குறைகள் மறக்கலாம்.
மகாராஜாவின் சீரியஸ் விஜய் இதில் ஜாலியான மனிதராக வருகிறார். ரசித்து விட்டு வரலாம்
சூதாட்டல் கிளப்பில் நடக்கும் காட்சிகள் கைதட்டல் பெறுகின்றன. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.