இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு இருவருக்குமான விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. விவாகரத்து முடிவை சாய்ராபானு வாபஸ் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நேரத்தில் இது பற்றி கருத்து தெரிவிக்காத இசைக்கலைஞர் மோகினி டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டிருக்கும் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
எனக்கும், ஏஆர் ரஹ்மானுக்கும் எதிராக அடிப்படையே இல்லாத ஊகங்கள், தவறான தகவல்கள் பெருமளவில் வெளியாவதை என்னால் நம்பவே இயலவில்லை. நான் எனது சிறு வயதிலிருந்தே ரஹ்மானின் படங்கள், அவரது இசை டூர்களில் பணியாற்றியுள்ளேன். அந்த 8.5 ஆண்டு பயணத்தை மிகப்பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். ஆனால் இதுபோன்ற உணர்வுப்பூர்மான விஷயங்களில் பொதுமக்கள் எவ்வித மரியாதை, பரிவு மற்றும் அனுதாபம் இல்லாமல் நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. மக்களின் மனநிலையைப் பார்த்து நான் வேதனைப்படுகிறேன். சில ஊடகங்கள் இந்த இரு சம்பவங்களையும் கொச்சைப்படுத்தியது குற்றச்செயல் எனக் கருதுகிறேன்.
ரஹ்மான் எனக்குத் தந்தையைப் போன்றவர். என் வாழ்வில் எனக்கு நிறைய ரோல் மாடல்கள், தந்தைக்கு நிகரான அன்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என் பணி நிமித்தமான வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றியுள்ளனர். எனது தந்தை இசையில் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்தார். அவர் கடந்த ஆண்டு மறைந்தார். ரஞ்சிபரோட் தான் என்னை இந்த இசைத் துறையில் அறிமுகப்படுத்தினர். லூயி பாங்ஸ் என்னை செதுக்கினார். ஏஆர் ரஹ்மன் அவரது இசை நிகழ்ச்சியில் நான் மிளிர எனக்கு சுதந்திரம் தந்தார். அவரது ரெக்கார்டிங் செசன்களிலும் அவரது இசைக் கோப்புகளிலும் எனக்கு சுதந்திரம் தந்தார். அந்தத் தருணங்கள் மகத்தானவை. அவற்றை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.