இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சூர்யாவின் 45 வது படத்திறகு இசையமைக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் அவர் திடீர் என்று ஒரு ப்ரேக் எடுத்துக் கொள்வதாக அறிவித்து விட்டார். இதனால் அந்தப்படத்திற்கு புதிய இசையமைப்பாளரை தேடிப்பிடித்திருக்கிறது படக்குழு.
ஸ்பாடிஃபை ப்ளே லிஸ்டில் டாப்பில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வருடமும் அதே நிலையில் தொடர்ந்தார். ஆனால், அவருக்கு தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. இவரது விவாகரத்து குறித்த அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரது கேரக்டரை டார்கெட் செய்து யூடியூப் சேனல்கள் பல, அவதூறு பரப்ப ஆரம்பித்தன. இதனால் அவர் உள்பட அவர் குடும்பத்தில் இருந்த அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைத்துறையில் இருந்து 1 வருடத்திற்கு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் கமிட் ஆகியிருக்கும் படம், சூர்யா 45. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இப்போது ரஹ்மான் பிரேக் எடுத்திருப்பதால் அந்த படத்தில் இருந்து விலகியிருக்கிறார். இதனால் அவருக்கு பதிலாக ஒரு இளம் இசையமைப்பாளர் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்.
மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பாலாஜி. இதையடுத்து வீட்ல விசேஷம் படத்தை இயக்கி வெற்றிகண்ட அவர், அடுத்ததாக இயக்கி வரும் திரைப்படம் சூர்யா 45. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஏ.ஆர்.ரகுமான் விலகியதால் அவருக்கு பதில் யார் இசையமைப்பாளர் ஆகப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அதுகுறித்த அறிவிப்பை படக்குழுவே வெளியிட்டுள்ளது. அதன்படி கட்சி சேரா, ஆசை கூட போன்ற சுயாதீன பாடல்களுக்கு இசையமைத்து தற்போது சென்சேஷனல் இசையமைப்பாளராகவும் பாடகராகவும் வலம் வரும் சாய் அபயங்கர் தான் சூர்யா 45 படத்துக்கு இசையமைக்க உள்ளாராம்.