No menu items!

முதல்வர்  தலைமையில் செப்.13-ம் தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா

முதல்வர்  தலைமையில் செப்.13-ம் தேதி இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் செப்​.13-ம் தேதி சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் பாராட்டு விழா நடை​பெறுகிறது.

இதுகுறித்​து, தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: இசை​ஞானி இளை​ய​ராஜா தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், இந்தி போன்ற பல்​வேறு மொழிகளில் 1,500-க்​கும் மேற்​பட்ட திரைப்​படங்​களில், 8,500-க்​கும் மேற்​பட்ட பாடல்​களுக்கு இசையமைத்துள்​ளார்.

கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளை​ய​ராஜா​வின் இசைப்​பயணம் இந்த ஆண்​டுடன் 50 ஆண்​டு​களை நிறைவு செய்​கிறது. திரை​யிசை மட்​டுமின்றி பல்​வேறு தனி​யிசை படைப்​பு​களை​யும் வெளி​யிட்​டுள்​ளார் இளை​ய​ராஜா. முழு மேற்​கத்​திய பாரம்​பரிய சிம்​பொனி இசை சிகரத்​தை​யும் தொட்டு சாதனை படைத்​துள்​ளார்.

இந்த சாதனையை படைத்த முதல் தமிழர் மட்​டுமல்ல இளை​ய​ராஜா முதல் இந்​தி​யரும் ஆவார். ஆசிய நாடு​களைச் சேர்ந்த எவரும் இச்​சாதனையை இது​வரை நிகழ்த்​த​வில்லை என்​பது குறிப்​பிடத்​தக்​கது. கடந்த மார்ச் 8-ம் தேதி லண்​டனில் முதல் நேரடி சிம்​பொனி இசைநிகழ்ச்சி நடத்​த​விருந்த நிலை​யில், மார்ச் 2-ம் தேதி முதல்​வர் ஸ்டா​லின், இளை​ய​ராஜா வீட்​டுக்கு சென்று பாராட்டி​னார்.

தொடர்ந்து லண்​டன் சென்று சிம்​பொனி சாதனை நிகழ்த்தி சென்னை திரும்​பிய நிலை​யில், முதல்​வரை சந்​தித்து நன்றி தெரிவித்தார். இதன்​பின், முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில், ‘இளை​ய​ராஜா​வின் அரை நூற்​றாண்டு காலத் திரை​யிசைப் பயணத்தை அரசின் சார்​பில் கொண்​டாட முடி​வெடுத்​துள்​ளோம்’ என அறி​வித்​திருந்​தார்.

அதன்​படி, வரும் செப்​.13-ம் தேதி சனிக்​கிழமை மாலை 5.30 மணிக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் சென்​னை, நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் திரை​யுல​கில் பொன்​விழா காணும் இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு தமிழக அரசின் சார்​பில் மிகப்​பெரிய அளவில் பாராட்டு விழா நடை​பெறுகிறது.

இந்​நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தில் இன்​னிசை நிகழ்ச்​சி​யும், அதனைத் தொடர்ந்து இளைய​ராஜா​வின் சிம்​பொனி இசைநிகழ்ச்சியும் நடை​பெறும். விழா​வில், துணை முதல்​வர் உதயநிதி வரவேற்புரையாற்றுகிறார். முதல்​வர் ஸ்டா​லின் தலைமை​யுரை​யாற்​றுகிறார். நடிகர்​கள் கமல்​ஹாசன், ரஜினி​காந்த்​ ஆகியோர்​ வாழ்த்​துரை வழங்​கு​கின்​றனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...