No menu items!

15 குழந்தைகள் மரணம் – குஜராத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்

15 குழந்தைகள் மரணம் – குஜராத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்

சந்திபுரா மூளைக் காய்ச்சல், இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அபாயகரமான அளவில் குழந்தைகளிடையே பரவி வருகிறது. தொற்றுக்கு உள்ளான 29 குழந்தைகளில் 15 குழந்தைகள் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எந்தளவு இந்த நோய் அபாயகரமான, இதன் அறிகுறிகள், பரவும் விதம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டாக்டர் அ.ப. ஃபரூக் அப்துல்லாவைக் கேட்டோம்…

“மகாராஷ்ட்ரா மாநிலம் சந்திப்புரா எனும் கிராமத்தில் முதல் முறையாக இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டமையால் ‘சந்திப்புரா வைரஸ்’ என்று அழைக்கப்படுகிறது.

தொற்று ஏற்படுபவர்கள் பெரும்பாலும் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் இந்த நோய்க்கு ‘சந்திப்புரா மூளைக்காய்ச்சல்’, ‘சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்’ என்று பெயர்.

இந்தத் தொற்று பெரும்பாலும் கிராமங்களில் பரவுவது தெரிகிறது. கிராமங்களில் உள்ள மண்ணால் ஆன வீடுகளில் உள்ள விரிசல்களில் புற்று கட்டி வளரும். அதிலுள்ள மணல் ஈக்களின் வாய்களுக்குள் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளுக்குள் வளரும். இந்த மணல் ஈக்கள் மனிதர்களைக் கடிக்கும் போது அவர்களுக்கு வைரஸ் தொற்று கடத்தப்படுகிறது. இவ்வாறாக தொற்றைப் பெற்றவரிடம் இருந்து மணல் ஈக்கள் மற்றும் சில வகை கொசுக்கள் இந்த வைரஸை ஆரோக்கியமான நபர்களுக்கும் பரப்பிவிடுகின்றன. இந்த வழி தவிர மனிதர்களிடையே தொடுவதாலோ வேறு வழிகளிலோ வைரஸ் பரவுவதில்லை.

வைரஸ் தொற்றைப் பெரும் குழந்தைகளுள் சிலருக்கு நோயின் அறிகுறிகள் வெளிப்படும். அதீத காய்ச்சல், வலிப்பு, குழப்ப நிலை, வாந்தி, வயிற்றுப் போக்கு, தலைவலி, மூர்ச்சை நிலை, கோமா ஏற்படும்.

ஃப்லிபோடோமைன் எனும் மணல் ஈ வகையைப் போலவே, இந்த வைரஸ், டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் இஜிப்டி வகை கொசுக்களாலும் பரவும் என்பதால், ஏற்கனவே டெங்கு தொற்றுப் பரவல் உள்ள மாநிலங்கள் அலர்ட் நிலையில் இருக்க வேண்டும்.

2003இல் நடந்த சந்திப்புரா மூளைக்காய்ச்சல் நோயில் ஆந்திர பிரதேசத்தில் 183 குழந்தைகள் மடிந்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இறந்த குழந்தைகளைப் பொருத்தவரை, மருத்துவமனையில் அட்மிட் ஆன 48 மணிநேரங்களுக்குள் மரணம் சம்பவித்திருக்கிறது.

நோய்த் தொற்று கண்டவரின் ரத்த மாதிரிகளில் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து வைரஸைக் கண்டறியலாம். நோய் நிலைக்கு ஆளானோருக்கு சுவாசம் விடுதல், ரத்த ஓட்டம், நாடித்துடிப்பு போன்றவற்றை முறையாகப் பராமரிக்கப்பட்டு அதனுடன் நீர்ச்சத்து மற்றும் தாது உப்புகள் சரியாக இருக்குமாறு சிரை வழி திரவங்கள் வழங்கப்படும்.

தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள மணல் ஈக்கள் உருவாகும் இடங்களான வீடுகளில் உள்ள விரிசல்களைப் பூசிவிட வேண்டும். பூச்சிக் கொல்லி மருந்துகளைத் தெளித்து அவற்றைக் கொல்ல வேண்டும்.டெங்கு கொசு உற்பத்தி ஆகும் இடங்களை அழிக்க வேண்டும். வீட்டுக்குள்ளும் வீடுகளுக்கு வெளியேவும் நீர் சிறிதளவு கூட தேங்கி நிற்பதை தடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு கை கால்களை முழுவதுமாக மறைக்குமாறு உடை அணிவிக்க வேண்டும். கொசு வலைக்குள் குழந்தைகளைப் படுக்க வைக்கலாம்.

வீட்டில் சேரும் குப்பைகளை உரிய முறையில் வெளியேற்ற வேண்டும். கொசு விரட்டிக் களிம்புகள், விரட்டிகள் போன்றவற்றை உபயோகித்து கொசு கடிக்காமல் பார்த்துக் கொள்ளலாம். 0சந்திப்புரா வைரஸ் தொற்று பரவும் மாநிலங்களின் பரவல் இருக்கும் மாவட்டங்களில் இருந்து நமது ஊருக்கு வரும் மக்களில் இந்த அறிகுறிகள் தோன்றினாலும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுவரை 1965, 2003 ,2009 -2011 ஆகிய காலங்களில் இந்த வைரஸ் பரவல் நிகழ்ந்துள்ளது. எனினும் நாடு முழுவதும் பரவியதாகவோ மிகப்பெரிய அளவில் பாதிப்புகளையும் உயிர்சேதங்களையும் ஏற்படுத்தியது எனவோ வரலாறு இல்லை. எனவே, அளவு கடந்த அச்சம் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வு போதுமானது” என்கிறார் டாக்டர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...