இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) 10 கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த தோல்விப் பாதையில் இருந்து மீள பல்வேறு ஆலோசனை கூட்டங்களை பிசிசிஐ நட்த்தி வருகிறது. இந்த ஆலோசனை கூட்டங்களின் பலனாக கிரிக்கெட் வீர்ர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ளது. அந்த 10 கட்டுப்பாடுகளில் கூறியிருப்பதாவது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்பந்தத்தில் உள்ள மற்றும் தகுதியான வீரர்கள் அனைவரும் கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும்.
அத்தியாவசியமான ஒருசில காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். இது அவர்கள் தொடர்ந்து உடற்தகுதியுடன் இருப்பதுடன், இளம் வீர்ர்களுக்கு அவர்களால் உற்சாகம் அளிக்கவும் உதவும்.
இந்திய அணி சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளும் காலகட்டங்களில், கிரிக்கெட் வீரர்கள் அணியுடன்தான் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். தனியாக குடும்பத்துடன் பயணம் செய்யக்கூடாது.
நீண்டகால கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்க செல்லும் வீர்ர்கள், தங்களுடன் 150 கிலோ எடைக்கு மேல் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. அதேபோல் குறுகியகால கிரிக்கெட் தொடர்களில் ஆடச்செல்லும் வீரர்கள் தங்களுடன் 120 கிலோ எடைக்கு மேல் பொருட்களை எடுத்துச்செல்ல கூடாது.
கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் சமையல் கலைஞர்கள், தனிப்பட்ட உதவியாளர்கள், மேலாளர்கள் போன்றோரை அழைத்துச்செல்ல கூடாது. அப்படி அழைத்துச் செல்வதாக இருந்தால் அவர்களின் செலவுகளை கிரிக்கெட் வீரர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வீரர்களின் உடமைகளை பெங்களூருவில் உள்ள செண்டர் ஆஃப் எக்சலன்ஸ் மூலம்தான் அனுப்பவோ, பெறவோ வேண்டும்.
கிரிக்கெட் சுற்றுப்பயணங்களின்போதோ மற்ற நேரத்திலோ வீரர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகளில் அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.
கிரிக்கெட் தொடர்களின்போதோ, சுற்றுப்பயணங்களின்போதோ கிரிக்கெட் வீரர்கள் தனிப்பட்ட படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளக் கூடாது. கிரிக்கெட் வீரர்களின் கவனத்தை இவை திசைதிருப்பக்கூடும்.
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் தங்கள் மனைவி உள்ளிட்ட குடும்பத்தினரை அழைத்து செல்வதால் விளையாட்டில் கவனம் சிதறுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. இதிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்படுகிறது. 45 நாட்களுக்கு மேல் வெளிநாட்டு தொடர் என்றால் வீரர்களுடன் 2 வாரம் மட்டும் குடும்பத்தினர் தங்கியிருக்க அனுமதிக் கப்படுவார்கள்.
பிசிசிஐ நடத்தும் நிகழ்ச்சிகள், பயிற்சி முகாம்கள், படப்பிடிப்புகள் போன்றவற்றில் கிரிக்கெட் வீர்ர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.