இசைஞானி இளையராஜா இசையில் யோகிபாபு நடிக்கும் படம் ” ஸ்கூல் “. ஆர்.கே. வித்யாதரன் தயாரித்து, இயக்கியுள்ளார். ‘ரோஜாக்கூட்டம்’ பூமிகா சாவ்லா, யோகிபாபு, கே.எஸ். ரவிகுமார் மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நிழல்கள் ரவி, பக்ஸ், சாம்ஸ், பிரியங்கா வெங்கடேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
பொதுவாக, தான் நடித்த பாடல் வெளியீட்டுக்கு யோகிபாபு அதிகம் வருவதில்லை. அந்தளவுக்கு பிசியாக மற்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனால் சென்னை யில் நட ந்த ஸ்கூல் இசை வெளியீட்டு அவர் கல ந்து கொண்டு தனது ஸ்கூல் நினைவுகள் குறித்து பேசினார். அவர் பேசுகையில் , ‘‘ இங்கே வந்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது. “ஸ்கூல்” படத்தில் நடிக்க என்னைக் கூப்பிடும்போது, முதலில் பியூன் கேரக்டர் என்றார் இயக்குனர். அப்புறம், வாத்தியார் கேரக்டருக்கு ஆள் வரவில்லை என்று நினைக்கிறேன். தடாலென என்னை வாத்தியார் ஆக்கிவிட்டார். 6 நாட்களில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை அழகாக எடுத்துள்ளார் இயக்குனர். நிஜத்தில் நான் படித்ததெல்லாம் கவர்மெண்ட் ஸ்கூல் தான். நான் படிச்ச ஸ்கூல் கதையைப் படமாக்கவேண்டுமென, பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறேன். அது, என் வாழ்க்கை கதை. இந்த இயக்குனர் வித்யாதரன் மனது வைத்தால், கண்டிப்பாக அதைப் படமாக செய்துவிடலாம். இ ந்த விழாவுக்கு தாமு அண்ணன் வந்துள்ளார். அவரை பல சினிமா விழாக்களில் பார்த்து இருக்கிறேன். இப்போதுதான் முதன்முறையாக சினிமா விழாவில் பார்க்கிறேன். அவரைப் பார்த்துத் தான் நானெல்லாம் நடிக்க வந்தேன், அவரோடு இணைந்து நடிக்க ஆசை. இளையராஜா என்றுமே ராஜாதான். ஒரே சூரியன், ஒரே நிலவு மாதிரி, ஒரே ராஜாதான். இதிலும் மிக அருமையான இசையைத் தந்துள்ளார். இந்த படத்துக்காக அவரை நம்ம இயக்குனர் ரொம்பவே டார்ச்சர் செய்து பாட்டு வாங்கியிருக்கிறார் போல, எப்படியோ, இளையராஜா இசையில் நடித்தது மகிழ்ச்சி. படம் நன்றாக வந்துள்ளது’’ என்றார்.
நடிகர் தாமு பேசுகையில், ‘‘ நான் சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பது இல்லை. சினிமா விழாக்களுக்கு அதிகம் செல்வது இல்லை.காரணம். அப்துலகலாம் ஐயா கட்டளைப்படி மாணவர்களுக்கு தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துகிறேன். 50 லட்சம் மாணவர்களை சந்திக்க வேண்டும் என்பது எனக்கு கட்டளை, இதுவரை 31 லட்சம் மாணவர்களை சந்தித்துள்ளேன். அந்த பணியை முடித்துவிட்டு 2029ம் ஆண்டில் சினிமாவில் கவனம் செலுத்துவேன். நான் சினிமாவுக்கு முழுக்க போடவில்லை’’ என்றார்.