No menu items!

விஜயின் வியூகம் 2026 யில் வெற்றிக்கு வழிவகுக்குமா?

விஜயின் வியூகம் 2026 யில் வெற்றிக்கு வழிவகுக்குமா?

தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதன் மூலம் விஜய் கிட்டத்தட்ட அதிமுக வாக்காளர்களை தன் பக்கம் மொத்தமாக இழுக்க தொடங்கி உள்ளார்.

அதிமுகவின் அடிப்படை வாக்குகள் என்பது 3 வகையான வாக்குகள். 1. எம்ஜஆர் – ஜெயலலிதா வாக்குகள் . 2 திமுகவின் எதிர்ப்பு வாக்குகள். 3. இஸ்லாமியர்கள் வாக்குகள் (பாஜகவுடன் கூட்டணி இல்லாத பட்சத்தில்) ஆகிய வாக்குகள்தான் கிடைக்கும். இதை மனதில் வைத்ததே நேற்று எம்ஜிஆர், இஸ்லாமியர்கள் பற்றி விஜய் பேசினார். அதோடு நிற்காமல், திமுகவையும் கடுமையாக தாக்கி பேசினார்.

நேற்று விஜய் தனது பேச்சில், கூட்டணி வைக்கலாம்.. கூட்டணி வச்சு தப்பிச்சிக்கலாம் என்று திமுக நினைக்கிறது, அது நடக்காது. இஸ்லாமியர்களுக்கு எதிராக சதி செய்யும் ஆட்சி பாஜக ஆட்சி. நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. மோடிக்கு கேள்விகளை கேட்க வந்துள்ளேன். இதுதான் நீங்கள் நடத்தும் ஆட்சியா? செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ? என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?” தவெக தலைவர் விஜய்

நீங்க ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா? நரேந்திர தாமோதர் தாஸ் மோடியே – மக்களை ஏமாற்றியது போதும். எம்ஜிஆர் இருக்கிற வரை யாராலும் முதல்வர் ஆக முடியவில்லை.. அப்படிப்பட்ட தலைவர் அவர். எம்ஜிஆர் அப்படிப்பட்ட உயர்ந்த தலைவர். எம்ஜிஆர் மிகப்பெரிய நபராக இருந்தார். அவரின் இடத்தை யாராலும் நிரப்பி முடியவில்லை.

வெற்று விளம்பர மாடல் திமுக பாஜக உடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளது, ஒரு ரெய்டு வந்தால் போதும் உடனே டெல்லிக்கு போய் ரகசிய மீட்டிங் போடுகிறார்கள் , ஸ்டாலின் அங்கிள் – வெரி ராங்க் அங்கிள். மை டியர் அங்கிள்.. ஸ்டாலின் அங்கிள்.. சொல்லுங்க அங்கிள். உங்களை அப்பான்னு வேறு சொல்லனுமா.. சாரி அங்கிள்.. என்ன இதெல்லாம்.. வெரி வெரி வொர்ஸ்ட் அங்கிள், என்று விஜய் தாக்கி பேசினார்.

மதுரை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசியதன் மூலம் நடிகர் விஜய் கிட்டத்தட்ட அதிமுகவை அபகரிக்க தொடங்கி உள்ளார். அதிமுக வாக்காளர்களை தன் பக்கம் மொத்தமாக இழுக்க தொடங்கி உள்ளார்.

1. அதிமுகவை அபகரிக்கும் விதமாக – தான் எம்ஜிஆருக்கு ஆதரவு என்பது போல காட்டிக்கொள்ள தொடங்கி உள்ளார்.

2. அதிமுகவின் அடிப்படை வாக்குகளில் ஒன்றாக திமுக எதிர்ப்பை கையில் எடுத்துள்ளார். திமுக எதிர்ப்பு வாக்குகளை தன் பக்கம் இழுக்க விஜய் திமுகவை மோசமாக அடிக்க தொடங்கி உள்ளார்.

3. அதோடு பாஜக – அதிமுக கூட்டணியால் வெளியேறும் இஸ்லாமியர்கள் வாக்குகளை இழுக்கவும் விஜய் திட்டமிட்டு பேசி உள்ளார்.

4. ஆனால் இந்த பேச்சுக்கள் ஆழமாக இல்லை என்பது வேறு விமர்சனம்.

5. இதை உணர்ந்துகொண்ட நேற்று யாமல் ஒரு கட்சிக்கு எப்படி தலைவர் இருக்க முடியும்? இவரை நம்பி இவரின் பின்னால் இருப்பவர்களின் நிலை என்ன ஆகும். நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் சில பேர் சில கருத்துகளை தம் இஷ்டம் போல பேசுகிறார்கள்.

6. அதிமுக அப்படி அல்ல. ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி, அதன் மூலமாக ஏற்றம் பெற்ற கட்சி அதிமுக. ஒரு மரம் எடுத்ததுமே பழம் தருவதில்லை. பூ பூத்து, காயாகி, கனியைக் கொடுக்கும். அப்படித்தான் எம்ஜிஆர் கட்சி தொடங்கி, உழைத்து ஆட்சியைப் பிடித்தார்.

7. ஆட்சி அமைக்க கடுமையாக உழைக்க வேண்டும். புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் நம் தலைவர்களின் படங்கள் வைத்து தான் தொடங்குவார்கள். உழைப்பை தராமல் சிலர் பலனை எதிர்பார்க்கிறார்கள். கட்சி தொடங்கிய உடனே ஆட்சிக்கு வந்துவிடமுடியாது. திமுகவை வீழ்த்தும் ஒரே சக்தி அதிமுக தான்” எனப் பேசியுள்ளார் இபிஎஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...