No menu items!

விராட் கோலியின் மதிப்பு ரூ1,901 கோடி

விராட் கோலியின் மதிப்பு ரூ1,901 கோடி

இந்தியாவின் பிரபலங்கள் அனைவரும் ஆண்டுதோறும் ஆர்வமாக பார்க்கும் விஷயங்களில் ஒன்று க்ரோல் நிறுவனம் வெளியிடும் பிரபலங்களின் தரவரிசைப் பட்டியல். பிரபலங்களின் விளம்பர மார்க்கெட்டை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், சினிமா நட்சத்திரங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தைப் பிடித்துள்ளார் கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அவரது பிராண்ட் மதிப்பு 1,901 கோடி ரூபாய்.

இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ள முக்கிய பிரபலங்களைப் பார்ப்போம்…

விராட் கோலி:

கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்றதில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதனாலேயே அவரது ரசிகர்களின் என்ணிக்கை அதிகரிக்க பிராண்ட் வேல்யூவும் கூடியிருக்கிறது. விராட் கோலி தங்கள் பொருளை விளம்பரப்படுத்தினால், அதன் விற்பனை பல மடங்கு உயரும் என்ற நம்பிக்கையில் பல நிறுவனங்கள் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுத்துள்ளன. இதன் காரணமாக அவரது பிராண்ட் மதிப்பு கடந்த 2023-ம் ஆண்டில் 227.9 மில்லியன் அமெரிக்க டாலராக (1,901 கோடி ரூபாய்) உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட பிரபலம் என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத் தந்திருக்கிறது.

ரன்வீர் சிங்:

பிராண்ட் மதிப்பை பொறுத்தவரை கடந்த 2022-ல் முதல் இடத்தில் இருந்தவர் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங். ஆனால் 2023-ல் அவர் 2-வது இடத்துக்கு சறுக்கியிருக்கிறார். 2023-ம் ஆண்டில் அவரது பிராண்ட் மதிப்பு 203.1 மில்லியன் அமெரிக்க டாலராக (1,694 கோடி ரூபாய்) இருந்துள்ளது.

ஷாரூக் கான்:

ஷாரூக் கானைப் பொறுத்தவரை, கடந்த ஆண்டில் அவர் நடிப்பில் வெளியான ஜவான் சூப்பர் ஹிட் அடித்த்து. அதனால் அவரது விளம்பர மதிப்பு ஏகத்துக்கு எகிறியது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக அதிக மதிப்பு கொண்ட டாப் 5 பிரபலங்களின் லிஸ்ட்டில் இணைந்திருக்கிறார் ஷாரூக் கான். 2023-ம் ஆண்டில் அவரது விளம்பர மதிப்பு 120.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது 1,006 கோடி ரூபாய். இந்த லிஸ்டில் இருப்பதிலேயே இவர்தான் அதிக வயதானவர். 58 வயதில் இந்தியாவின் 3-வது காஸ்ட்லி பிரபலமாக இருக்கிறார் ஷாரூக்.

அக்ஷய் குமார்:

2023-ம் ஆண்டில் ஷாரூக் கான் அடைந்த வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட நட்சத்திரமாக அக்ஷய் குமார் இருக்கிறார். கடந்த ஆண்டில் 3-வது இட்த்தில் இருந்த அக்ஷய், இந்த ஆண்டில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவரது பிராண்ட் மதிப்பு 111.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய மதிப்பின்படி 931 கோடி ரூபாய்.

ஆலியா பட்:

டாப் 5 பிரபலங்களின் வரிசையில் இடம்பிடித்துள்ள ஒரே பெண் ஆலியா பட். இவரது பிராண்ட் மதிப்பு 101.1 மில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 843 கோடி. கடந்த 2023-ம் ஆண்டு 4-வது இடத்தில் இருந்த ஆலியா பட், 2023-ல் 5-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார்.

இந்த வரிசையில் அடுத்த 5 இடங்களை, தீபிகா படுகோன் (96 மில்லியன் அமெரிக்க டாலர்), தோனி (95.8 மில்லியன் அமெரிக்க டாலர்), சச்சின் டெண்டுலகர் (91.3 மில்லியன் அமெரிக்க டாலர்), சல்மான் கான் (81.7 ஆகியோர் பிடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...