இந்தியாவின் ஜனாதிபதி மாளிகையில் ஒருவர் நுழைவது அத்தனை சுலபமில்லை. பல்வேறு பாதுகாப்புபு சோதனைகளை தாண்டித்தான் உள்ளே நுழைய முடியும். அதுவும் முன்கூட்டியே முறைப்படியான அனுமதியை வாங்கித்தான் உள்ளே நுழைய முடியும். அதிலும் ஜனாதிபதி, பிரதமர், துணை ஜனாதிபதி, வெளிநாட்டு தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள்தான் அங்கு பொதுவாக நடக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் வரும் 12-ம் தேதி முதல் முறையாக ஒரு தனியாரின் நிகழ்ச்சி நடக்கப் போகிறது. மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த பூனம் குப்தா எனும் பெண் அதிகாரியின் திருமணம்தான் அந்த நிகழ்ச்சி. இதன் மூலமாக ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் முதல் திருமணம் என்கிற பெருமை பூனம் குப்தாவின் திருமணத்துக்கு கிடைக்கப் போகிறது.
இதைத் தொடர்ந்து யார் இந்த பூனம் குப்தா என்கிற கேள்வி பெரிய அளவில் எழுந்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் personal security officer-ஆக வேலை பார்ப்பவர்தான் பூனம் குப்தா. மத்திய பிரதேச மாநிலத்தின் சிவபுரிங்கிற பகுதியைச் சேர்ந்தவரான பூனம் குப்தா, கணித்த்தில் பட்டம் வாங்கியவர். 2018-ம் ஆண்டில் இருந்து மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையில இவர் வேலை பார்த்து வருகிறார்.
பிஹார் மாநிலத்தில் நக்சல்கள் நிறைந்த பகுதியில் சிறப்பாக பணியாற்றிய பூனம் குப்தா, பின்னர் ஜனாதிபதி மாளிகைக்கு மாற்றப்பட்டார். ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றும் சிஆர்பிஎஃப் வீர்ர்களில் சிறந்தவராக கருதப்படும் பூனம் குப்தா, சமீபத்தில் 74 ஆவது குடியரசு தின அணிவகுப்பின்போது அனைத்து பெண்களும் அடங்கிய ஒரு படைப்பிரிவை வழிநடத்தி தன்னோட திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பூனம் குப்தாவுக்கும், காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல் படையில் துணை கமாண்டண்டா இருக்கும் அவ்னாஷ் குமாருக்கும் பிப்ரவரி மாதம் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருக்கு. தான் வேலை பார்க்கும் ஜனாதிபதி மாளிகையிலேயே தன் திருமணம் நடக்க வேண்டும் என்று பூனம் குப்தா விரும்பி இருக்கிறார். இதற்கு ஜனாதிபதி திரௌபதி முர்முகிட்ட அனுமதி கேட்டிருக்கார்.
பூனம் குப்தா ஒரு சிறந்த அதிகாரிங்கிறதால, ஜனாதிபதி மாளிகையில திருமணம் நடத்த திரௌபதி முர்மு அனுமதி கொடுத்திருக்காங்க. அதன்படி வர்ற 12-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில இருக்கற Mother Teresa Crown Complex –ல அவங்க திருமணம் நடக்கப்போகுது.
பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் ஏதும் இல்லாமல் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களை மட்டும் அழைத்து நிகழ்ச்சியை நடத்தச் சொல்லி ஜனாதிபதி மாளிகை அவருக்கு உத்தரவு போட்டிருக்கிறது. எளிய முறையில் திருமணம் என்றாலும் ஜனாதிபதி மாளிகையில் முதல் திருமணமா தன்னோட திருமணம் நடக்கப்போற மகிழ்ச்சியில இருக்காங்க பூனம் குப்தா.