No menu items!

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்

சென்னை ஒரகடத்தில் ஐபோன்களை தயாரிக்கும் மேலும் ஓர் ஆலையை அமைக்கிறது ஃபாக்ஸ்கான் நிறுவனம். ரூ.12,870 கோடி முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையில் ஐபோன் டிஸ்பிளே இணைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபோன் தயாரிப்பில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் அதிகரிக்கவுள்ளது.

தமிழ்நாட்டில் ஐபோன் தொடர்பாக ஃபாக்ஸ்கான் மற்றும் டாடா நிறுவனம் தொடர்ந்து முதலீடுகளை செய்து வருகிறது. ஏற்கனவே டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ஓசூரில் உள்ள அதன் புதிய உற்பத்தி நிலையத்தில் ஐபோன் மாடல்களை தயாரிக்க தொடங்கியுள்ளது

டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16e ஆகிய மாடல்களை இங்கே தயாரிக்க தொடங்கி உள்ளது. ஒவ்வொரு எண்ட்-டு-எண்ட் அசெம்பிளி லைனும் 2,500 தொழிலாளர்களை கொண்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முழுமையாக ஆலை செயல்பாட்டிற்கு வந்தது, ஓசூர் ஆலை டாடாவின் விஸ்ட்ரான் ஆலையின் அளவை விட பெரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கே ஒரு மணி நேரத்திற்கு சுமார் 300-500 ஐபோன் யூனிட்களை தொழிற்சாலையில் தயாரிக்க முடியும் என்று கூறப்பட்டு உள்ளது. இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.

இங்கே போன் 16 மற்றும் 16e மாடல்கள் தயாரிக்கப்படும். கட்டுமானம் முழுமையாக நிறைவடையும் போது,​​இந்த ஆலை முழு திறனில் 50,000 வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட் கூடுதலாக 35 ஆயிரம் பணியாளர்களை பணிக்கு எடுத்துள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே இங்கே 20 ஆயிரம் பணியாளர்கள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 35 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்ட நிலையில் மொத்தமாக 55 ஆயிரம் பேர் பணிக்கு அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.

50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

ஏற்றுமதி சாதனை

ஏற்கனவே FY25 இல் இந்திய மாநிலங்களில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.

  1. தமிழ்நாடு: $14.65 பில்லியன் 2. கர்நாடகா: $7.85 பில்லியன் 3. உத்தரப்பிரதேசம்: $5.26 பில்லியன் 4. மகாராஷ்டிரா: $3.51 பில்லியன் 5. குஜராத்: $1.85 பில்லியன் 6. தெலுங்கானா: $641.5 மில்லியன் 7. ஆந்திரப் பிரதேசம்: $387.3 மில்லியன்

2025 நிதியாண்டில் இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு மட்டும் 41.2% பங்களித்தது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாறி உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து 3வது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.

தமிழகத்தின் ஏற்றுமதி முதன்முறையாக 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது இது 9 பில்லியன் டாலர் கூடுதல் ஆகும். இதன் மூலம் இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச உயர்வை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.

24-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% (கடந்த ஆண்டில் 10.15% இல் இருந்து உயர்ந்து உள்ளது). இந்த முறை $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை மாநிலம் ஏற்றுமதி செய்தது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 Bn செய்தது. அதாவது தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...