நெல்லைப்பகுதியில் நடக்கும் மயானக்கொள்ளை திருவிழாவை அடிப்படியாக வைத்து சுழல் முதல் பாகம் வந்து பெரிய வெற்றியை பெற்றது. அதன் தனியார் ஓடிடி சேனலில் அதிகம் பேர் ரசித்துப் பார்த்த தொடர் என்ற பெருமையை பெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான லால், அவரது கடற்கரை வீட்டில் சுட்டுக் கொலை செய்யப்படுகிறார். கொலை வழக்கின் முதன்மை விசாரணை அதிகாரியாக வரும் சப்-இன்ஸ்பெக்டர் கதிர், காவல் நிலைய ஆய்வாளர் சரவணனுடன் இணைந்து விசாரணையை தொடங்குகிறார். அப்போது லால் கொலை செய்யப்பட்ட வீட்டில், வெளியே தாழிடப்பட்ட மர அலமாரிக்குள் கையில் துப்பாக்கியுடன் கெளரி கிஷன் இருக்கிறார். அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டாலும், அவரிடம் இருந்து எந்தவித தகவலையும் பெற முடியாததோடு, கொலை செய்துவிட்டு அலமாரியில் ஒளிந்துக் கொண்டாலும், வெளியே எப்படி தாழிட முடியும், என்பதாலும் கதிர் மற்றும் சரவணன் தலைமையிலான போலீஸ் குழு குழப்பமடைகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தின் வெவ்வேறு காவல் நிலையங்களில் வழக்கறிஞர் லாலை கொலை செய்ததாக 7 இளம் பெண்கள் சரணடைவதோடு, அவர்கள் அனைவரும் கொலை குறித்து ஒரே மாதிரியான விசயத்தை சொல்கிறார்கள். கெளரி கிஷனுடன் சேர்த்து மொத்தம் 8 பெண்கள் ஒரு கொலை வழக்கில் சரணடைந்தாலும், அவர்கள் அனைவருக்கும் ஒருவருக்கொருவர் எந்தவித தொடர்பும் இல்லாததும், அவர்களின் பின்னணி குறித்த எந்தவித தகவல்களும் கிடைக்காததும், போலீஸுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்துகிறது.
இருப்பினும் இந்த கொலைக்கான உண்மையான பின்னணி மற்றும் கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரம் காட்டும் கதிர், அதை எப்படி கண்டுபிடிக்கிறார், என்பதை சுவாரஸ்யமாகவும், பிரமாண்டமாகவும் சொல்வதே சுழல் 2
பரபரப்பான திரைக்கதையை இந்த சீசனுக்கும் எழுதி இருக்கிறார்கள் புஷ்கர் – காயத்ரி இயக்குநர் தம்பதி. இயக்கு நர்கள் பிரம்மா – கே.எம். சர்ஜுன் ஆகிய இருவரும் முதல் சீசனில் காட்டியிருந்த அதே புத்துணர்வை 8 எபிசோட்களிலும் பரவவிட்டிருக்கிறார்கள்.
இத்தொடரின் நாயகன் கதைதான் என்றாலும் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்ஸின் பாடல்களும் இசையும் அவரையே நாயகன் என்பதுபோல் காட்டியிருக் கின்றன.
நாட்டார் குல தெயவ வழிபாடும் அதைச்சுற்றி நடக்கும் சம்ப்வங்களும் அதில் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் பங்களிப்புமாக திரைக்கதையை சொல்லியிருக்கும் விதம் மிரட்டலாக இருக்கிறது. திருவிழா காட்சிகளும் மனித கூட்டமும் ஒவ்வொரு கட்டதிலும் மாறும் கதையும் போக்கும் சிறைச்சாலை அதில் நடக்கும் கோல்மால் என ஒவ்வொரு எபிஷொடையும் விறுவிறுப்பாக வைத்திருக்கிறது.
வழக்கம்போல் இந்த பகுதியும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கதிர், லால், ருத்ரா என்று அனைவரும் போட்டி போட்டு பங்களைப்பை வழங்கியிருக்கிறார்கள். அந்த ஜெயில் சண்டைக் காட்சியில் பெண்கள் பலரும் அர்ப்பணிப்போடு நடித்திருப்பது பாராட்டுக்குரியரிது.