No menu items!

தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

ஆதார், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டையை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிஹார் சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் நவம்பர் 22-ம் தேதியுடன் நிறைவடைகிறது. அந்த மாநிலத்தில் வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு சில மாதங்​களே இருக்​கும் நிலை​யில் பிஹார் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி கடந்த ஜூன் 24-ம் தேதி தொடங்​கியது. ஜூலை 25-ம் தேதிக்​குள் திருத்​தப் பணியை நிறைவு செய்ய இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

புதிய நடை​முறை​யின்​படி 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள், தாங்​கள் இந்​திய குடிமகன் என்​பதை நிரூபிக்க பிறப்​புச் சான்​று, பாஸ்​போர்ட் போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் எழுந்​துள்​ளது.

இந்த சூழலில் தேர்​தல் ஆணை​யத்​தின் சிறப்பு திருத்​தப் பணியை எதிர்த்து காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணுகோ​பால், ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, திரிண​மூல் காங்​கிரஸ் எம்பி மகுவா மொய்த்​ரா, இந்​திய கம்​யூனிஸ்ட் பொதுச்​செய​லா​ளர் டி.​ராஜா உட்பட 11 பேர் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​துள்​ளனர். இந்த வழக்கு கடந்த 7-ம் தேதி நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

அப்​போது வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணிக்கு இடைக்​கால தடை விதிக்க மறுத்த நீதிப​தி​கள், வழக்கை விசா​ரணைக்கு ஏற்​றுக் கொண்​டனர். இந்த வழக்​கில் நேற்று விசா​ரணை தொடங்​கியது.

மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கோபால் சங்​கர் நாராயண், கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோ​ரும் தேர்​தல் ஆணை​யத்​தின் சார்​பில் முன்​னாள் அட்​டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோ​பால், மூத்த வழக்​கறிஞர்​கள் ராகேஷ் துவிவே​தி, மணீந்​தர் சிங் ஆகியோ​ரும் ஆஜராகினர்.

இருதரப்​பினரும் சுமார் 3 மணி நேரம் தங்​கள் தரப்பு வாதங்​களை முன்​வைத்​தனர். இதன்​பிறகு நீதிப​தி​கள் சுதான்ஷு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி கூறிய​தாவது:

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்ள அரசி​யலமைப்பு சட்​டம் அனு​மதி வழங்​கு​கிறது. இதை நாங்​கள் எதிர்க்​க​வில்​லை. ஆனால் பிஹார் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நெருங்​கும் வேளை​யில் சிறப்பு திருத்​தப் பணியை மேற்​கொள்​வது ஏன்? முன்​கூட்​டியே திருத்​தப் பணியை மேற்​கொண்டு இருக்​கலாமே?

தற்​போது எந்த அடிப்​படை​யில் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் விரி​வான விளக்​கம் அளிக்க வேண்​டும்.

ஆதார் அட்​டை, வாக்​காளர் அட்​டை, ரேஷன் அட்​டையை அடை​யாள ஆவணங்​களாக ஏற்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் பரிசீலிக்க வேண்​டும். இதுகுறித்து தேர்​தல் ஆணை​யம் உரிய விளக்​கம் அளிக்க வேண்​டும்.

தேர்​தல் ஆணை​யம் தனது பதில் மனுவை ஒரு வாரத்​துக்​குள் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்ய வேண்​டும். அதன்​பிறகு மனு​தா​ரர்​கள் தங்​களது பதில் மனுக்​களை ஜூலை 28-ம் தேதிக்​குள் தாக்​கல் செய்ய வேண்​டும்.

இப்​போதைய சூழலில் சிறப்பு திருத்​தப் பணிக்கு மனு​தா​ரர்​கள் தரப்​பில் இடைக்​கால தடை கோரப்​பட​வில்​லை. பிஹாரில் வாக்​காளர் பட்​டியல் திருத்​தப் பணி​களை தொடர்ந்து மேற்​கொள்​ளலாம். அந்த மாநிலத்​தில் ஆகஸ்ட் 1-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட இருக்​கிறது. அதற்​கு முன்​பாக ஜூலை 28-ம்​ தேதி வழக்​கின்​ அடுத்​த வி​சா​ரணை நடை​பெறும்​. இவ்​வாறு நீதிபதிகள்​ உத்​தரவிட்​டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...