நடிகர் சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி, மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘கங்குவா’ திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில், ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். ரூ.350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம், வெளியான முதல் நாளே நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது.
கடந்த 2 ஆண்டுகளாக கடினமாக உழைத்து அவர் வெளியிட்ட படம் நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய தோல்விப் படமாக கங்குவா இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கங்குவா படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் சூர்யா 44 திரைப்படம் உருவாகி இருக்கிறது.
சூர்யா 44 திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இதையடுத்து சூர்யாவின் 45-வது படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் இன்னும் ஒரிரு மாதத்தில் தொடங்க உள்ளது. இப்படத்தை போல் நடிகர் சூர்யா மேலும் ஒரு பான் இந்தியா படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்படத்தின் பெயர் கர்ணா. இதை ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்க உள்ளாராம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் சுமார் 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தின் மூலம் நடிகர் சூர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் நேரடி இந்தி படம் இதுவாகும். கங்குவா படம் செம்ம அடி வாங்கிய நிலையில், அதே பாணியில் நடிக்க சூர்யா எடுத்துள்ள இந்த ரிஸ்க் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
இந்த நிலையில் தொலைக்காட்சி நடிகரான ரவி என்பவர் சூர்யா குறித்து கடுமையாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவர் பேசும்போது, சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம். தமிழ்நாட்டில் பிறந்து, வாழ்ந்த சூர்யா இங்கு தரமான கல்வி கிடைக்காது என்று, தன்னுடைய பிள்ளைகளுக்கு தரமான கல்வியை கொடுக்க மும்பைக்கு போனதாக சூர்யாவும் – ஜோதிகாவும் சொல்றாங்க. உங்க பிள்ளைகள் மட்டும் தரமான பள்ளிக்கூடத்தில் படிக்கணும். ஆனால், இங்கு இருக்கிற மாணவர்கள் எக்ஸ்ட்ரா ஒரு மொழியை கத்துக்கிட்டா… உன் புருஷனுக்கு பொத்துட்டு வந்துடும் என ஜோதிகாவிடம் கேள்வி எழுப்புவது போல் பேசி உள்ளார். அதாவது சூர்யா ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததை இதில் சுட்டிக்காட்டி உள்ள சீரியல் நடிகர் ரவி, நாங்களும் பண்ணுவோம்.. நாங்களும் செய்வோம்… தொடர்ந்து செய்வோம்… சூர்யா படத்தை தொடர்ந்து நாரடிப்போம், உன்னால முடிஞ்சா என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ போ… சவால் சவால் விடுவது போல் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.