சென்னையில் நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சிக்காக சுமார் 7.5 லட்சம் லிட்டர் பெட்ரோல் செலாவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு போர் விமானங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நேற்று நடைபெற்றது. இந்த விமான சாகசத்தை லட்சக்கணக்கான மக்கள் நேரில் கண்டு ரசித்தனர்.
இந்த சூழலில் இந்த விமான சாகச நிகழ்ச்சிக்காக எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவாகி இருக்கும் என்ற கணக்கு சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது. சங்கட் பிரகாஷ் என்பவர் தனது சமூக வலைதாள பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த கணக்கைப் பார்ப்போம்.
விமான சாகசத்தில் பங்கேற்ற விமானங்களின் எண்ணிக்கை: 72
மொத்த பறக்கும் நேரம்: 8 மணி நேரம்
கண்காட்சி நாள்: 2 மணி
ஒத்திகை நாட்கள்: 3 (ஒவ்வொரு நாளும் சுமார் 2 மணி நேரம்)
பயிற்சி மற்றும் சாகச நாளில் ஒவ்வொரு விமான வகையின் எரிபொருள் பயன்பாடு…
ரஃபேல்: ஒரு மணி நேரத்துக்கு 1,500 லிட்டர் பெட்ரோல்
சுகோய் -30: ஒரு மணிநேரத்துக்கு 2,000 லிட்டர் பெட்ரோல்
மிக்-29: ஒரு மணி நேரத்துக்கு 1,200 லிட்டர் பெட்ரோல்
ஜாகுவார்: 1 மணி நேரத்துக்கு 1,000 லிட்டர் பெட்ரோல்
தேஜஸ்: ஒரு மணி நேரத்துக்கு 800 லிட்டர் பெட்ரோல்
சராசரி எரிபொருள் நுகர்வு:
ஒரு விமானத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 1,300 லிட்டர்
இந்த வகையில் பார்த்தால் 72 விமானங்களுக்கு சராசரியாக 1,300 லிட்டர் பெட்ரோல் என்ற வகையில் 7,48,800 லிட்டர் பெடோல் செலவாகி உள்ளது.
இந்த விமான பயிற்சியின்போது உமிழப்பட்ட கார்பன் டை ஆக்சைடின் (CO2) அளவு:
ஒரு லிட்டர் ஜெட் எரிபொருள் எரிக்கப்படும்போது 3.16 கிலோ CO2 உற்பத்தியாகிறது.
மொத்த கார்பன் டை ஆக்சைட் உமிழ்வு: 7,48,800 லிட்டர் × 3.16 கிலோ/லிட்டர் = 23,66,208 கிலோ அல்லது 2,366 டன் கார்பன் டை ஆக்சைட்
நைட்ரஜன் ஆக்சைடு (NOx) உமிழ்வு:
ஒரு டன் எரிபொருள் எரிக்கப்படும்போது 1.2 கிலோ NOx உற்பத்தியாகிறது
மொத்த எரிபொருளின் எடை: 7,48,800 லிட்டர் × 0.83 கிலோ/லிட்டர் = 6,21,504 கிலோ = 622 டன்
மொத்த NOx உமிழ்வு: 622 டன் × 1.2 கிலோ/டன் = 746.4 கிலோ NOx
சுருக்கம் (8 மணி நேரத்திற்கு):
மொத்த எரிபொருள் பயன்பாடு: 7,48,800 லிட்டர்
கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு: 2,366 டன்
நைட்ரஜன் ஆக்சைடு உமிழ்வு: 746.4 கிலோ
சுற்றுச்சூழல் தாக்கம்:
விமான சாகச நிகழ்ச்சியின்போது உமிழப்பட்ட இந்த கார்பன் டை ஆக்சைட் மற்றும் நைட்ரஜன் ஆக்சைட் அமில மழை மற்றும் ஸ்மாக் உருவாக்கத்திற்கு காரணமாக அமையலாம். இந்த உமிழ்வுகள் உள்ளூர் காற்றின் தரத்தையும் பாதிக்கக்கூடும்.