No menu items!

1500 கோடி ரூபாய்…16 கார்கள்…95 கோடி ரூபாய்க்கு நகை: அமிதாப்பின் சொத்துப் பட்டியல்

1500 கோடி ரூபாய்…16 கார்கள்…95 கோடி ரூபாய்க்கு நகை: அமிதாப்பின் சொத்துப் பட்டியல்

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் 5-வது முறையாக ராஜ்யசபா எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இதற்கான வேட்பு மனுவை அவர் நேற்று தாக்கல் செய்திருக்கிறார். ஜெயா பச்சன் 5-வது முறையாக எம்.பி ஆவதை விட, வேட்பு மனுவுடன் சேர்த்து அவர் தாக்கல் செய்த சொத்து பட்டியல்தான் பலரது காதில் புகையை வரவழைத்திருக்கிறது. ஜெயா பச்சனுக்கும், அவரது கணவர் அமிதாப் பச்சனுக்கும் உள்ள சொத்துகளின் மொத்த மதிப்பு என்ன தெரியுமா?… 1,578 கோடி ரூபாய்.

ஒன்றிரண்டு படங்கள் ஹிட் அடித்தாலே கோடிக்கணக்கில் சம்பளத்தை உயர்த்துவது சினிமா ஹீரோக்களின் வழக்கம். இந்த ஹீரோக்களுக்கெல்லாம் முன்னோடி அமிதாப் பச்சன். பாலிவுட்டின் நம்பர் 1 நட்சத்திரமாக பல ஆண்டுகள் வலம்வந்த அமிதாப் பச்சன், 1980-களில் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இருந்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிப்பதை குறைத்து குணச்சித்திர வேடங்களில் கவனம் செலுத்தினாலும் தயாரிப்பாளர்கள் அவருக்கு பணத்தை கொட்டிக் கொடுத்தனர். அதெல்லாம் சேர்ந்துதான் இன்று அவரது சொத்து மதிப்பு 1500 கோடி ரூபாயை கடக்க காரணமாக இருந்திருக்கிறது.

இத்தனைக்கும் இடைப்பட்ட காலத்தில் சொந்தமாக ஏபிசிஎல் என்ற நிறுவனத்தைத் தொடங்கி கோடிக்கணக்கில் அவர் பணத்தை இழந்தார். ஒரு கட்டத்தில் சம்பாதித்த பணத்தையெல்லாம் இழந்து ஓட்டாண்டி ஆகும் நிலைக்கு சென்ற அமிதாப் பச்சன், பின்னர் சுதாரித்துக்கொண்டார். பணத்துக்காக விளம்பரங்களிலும், ‘கோன் பனேகா கரோர்பதி’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றி மீண்டு வந்துள்ளார்.

இந்த வகையில் அவர் சேர்த்த சொத்துகளின் பட்டியலையும், தனது சொத்தின் பட்டியலையும் நேற்று தாக்கல் செய்திருக்கிறார் அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சன். இதில் தெரிய வந்துள்ள அமிதாப் பச்சனின் சொத்துகள்…

வீட்டின் மதிப்பு ரூ.100 கோடி:

மும்பையின் ஜுஹு பகுதியில் அமிதாப் பச்சனுக்கு சொந்தாமான வீடு உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். ’சட்டே பே சட்டா’ (Satte Pe Satta) என்ற படத்தில் நடித்ததற்காக பிரபல இயக்குநர் ரமேஷ் சிப்பி அவருக்கு இந்த வீட்டை பரிசாகக் கொடுத்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக இந்த வீட்டில்தான் அமிதாப் பச்சன் வசித்து வருகிறார். இந்த வீட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தள்ளி அமிதாப் பச்சன் வாங்கிய முதல் வீடான பிரதீட்ஷா இருக்கிறது. இதன் மதிப்பும் கோடிக்கணக்கில் உள்ளது.

வங்கி இருப்பு ரூ.120 கோடி:

ஜெயா பச்சன் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பின்படி, வங்கியில் அவரது பெயரில் இருக்கும் பணம் 10.11 கோடி ரூபாய். இதைத்தவிர அமிதாப் பச்சனின் பெயரில் 120.45 கோடி ரூபாய் இருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார் ஜெயா பச்சன்.

கடந்த 2022 – 23-ம் ஆண்டில் மட்டும் அமிதாப் பச்சன் 273.75 கோடி ரூபாயும், ஜெயா பச்சன் 1.64 கோடி ரூபாயும் வருவாய் ஈட்டி உள்ளதாக இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 கார்கள்:

மெர்சிடிஸ் கார், ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட 16 வாகனங்களை அமிதாப் பச்சனும் அவரது மனைவியும் வைத்திருக்கிரார்கள். இதில் அமிதாப் வைத்திருக்கும் ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் 5 கோடி ரூபாய்.

அமிதாப் பச்சனுக்கு சொந்தமாக 54.77 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும், ஜெயா பச்சனுக்கு 40.97 கோடி ரூபாஅய் மதிப்புள்ள நகைகளும் இருப்பதாகவும் இந்த பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 95.73 கோடி ரூபாய்.

இந்த அளவு மதிப்புள்ள நகைகளை அணிந்தால், அதன் எடையைத் தாங்கும் அளவுக்கு அவர்களின் உடலில் வலு இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...