மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் தாக்கல் செஞ்ச மத்திய பட்ஜெட்ல 12 லட்சம் வரைக்கும் ஆண்டு வருமானம் இருக்கறவங்க வருமான வரி செலுத்த வேண்டாம்னு சொல்லி இருந்தாங்க. பட்டாசு வெடிக்காத குறையா இதை மத்திய தர மக்கள் கொண்டாடினாங்க. தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கற பணத்துல ஒரு பகுதியை வரிங்கற பேர்ல தூக்கி கொடுக்க வேணாம்கிற நிம்மதிதான் இதுக்கு காரணம்.
இதுக்கு நடுவுல முகேஷ் அம்பானியோட ரிலையன்ஸ் நிறுவனம் ஒரு புதிய சாதனையை படைச்சிருக்கு. கடந்த 2023-2024 நிதியாண்டில் மட்டும் அந்த நிறுவனம் மொத்தம் 1.86 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசுக்கு வருமான வரியா செலுத்தியிருக்கு. ரிலையன்ஸ் நிறுவனம் சமீபத்தில் தாக்கல் செய்த அதோட வருடாந்திர அறிக்கையில இதைச் சொல்லியிருக்கு.
கடந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு 1.77 லட்சம் கோடி ரூபாயை வரியா கட்டின ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நிதியாண்டில் அதைவிட 9 ஆயிரம் கோடி ரூபாய் அதிகமா வரி கட்டியிருக்கு.
ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தின இந்த 1.86 லட்சம் கோடி ரூபாய் வரி இந்தியாவோட மொத்த பட்ஜெட்ல 4 சதவீத தொகைன்னு சொல்லப்படுது. இதன் மூலமா கடந்த நிதியாண்டில் மிக அதிகமா வரி கட்டிய நிறுவனம்கிற சாதனையை ரிலையன்ஸ் படைச்சிருக்கு.
உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் வரிசைல ரிலையன்ஸ் நிறுவனம் 48-வது இடத்துல இருக்கறதா அந்த நிறுவனத்தோட ஆண்டு அறிக்கைல சொல்லப்பட்டிருக்கு. அதோட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மொத்த வருமானம் கடந்த நிதியாண்டில் முதல் முறையா 10 லட்சம் கோடி ரூபாயை கடந்து இருக்கறதாவும் இந்த ஆண்டு அறிக்கை சொல்லுது.