No menu items!

அக்​.1 முதல்  விரைவு தபால் சேவையுடன்  பதிவு தபால் சேவை இணைப்பு -அஞ்​சல்​துறை

அக்​.1 முதல்  விரைவு தபால் சேவையுடன்  பதிவு தபால் சேவை இணைப்பு -அஞ்​சல்​துறை

இந்​திய அஞ்​சல்​துறை​யில் பதிவு தபால் சேவையை செப்​.1-ம் தேதி முதல் நிறுத்​தி, விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யான​ நிலை​யில், இது தற்​போது அக்​.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்​ள​தாக அஞ்​சல் துறை தெரி​வித்​துள்​ளது.

இந்​திய அஞ்​சல் துறை சேவை “கம்​பெனி மெயில்” என்ற பெயரில் கடந்த 1766-ம் ஆண்டு கிழக்கு இந்​திய கம்​பெனி ஆட்​சி​யில் வாரன் ஹேஸ்​டிங்ஸ் என்​பவ​ரால் தொடங்​கப்​பட்​டது. இது, 1854-ம் ஆண்டு டல்​ஹவுசி பிரபு​வால் சீரமைக்​கப்​பட்​டு, அஞ்​சல் கட்​ட​ணம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது. இதுவே அதி​காரப்​பூர்வ இந்​திய அஞ்​சல் துறை தொடங்​கப்​பட்ட ஆண்​டாக கரு​தப்​படு​கிறது.

தற்​போது, இந்​திய அஞ்​சல் துறை​யில் 1.59 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட அஞ்​சல் நிலை​யங்​கள் உள்​ளன. இதன்​மூலம், உலகின் மிகப்​பெரிய அஞ்​சல்​துறை​யாக இந்​திய அஞ்​சல்​துறை செயல்​படு​கிறது. இந்​திய அஞ்​சல் துறை மூல​மாக பல்​வேறு சேவை​கள் மக்​களுக்கு வழங்​கப்​படும் நிலை​யில், இவற்​றில் பதிவு தபால் சேவை முக்​கிய​மான​தாக இருக்​கிறது. பதிவு தபால் சேவை கடந்த 1854-ல் இந்​திய அஞ்​சல் துறை​யால் அறி​முகப்​படுத்​தப்​பட்​டது.

நீதி​மன்​றம், வங்​கி, அரசு துறை சார்ந்த கடிதங்​கள் உள்​ளிட்​டவை பதிவு தபால்​கள் மூலம் அனுப்​பப்​படு​கின்​றன. முக்​கிய ஆவணங்​கள், சான்​றுகளை அனுப்​பும் போது, வாடிக்​கை​யாளர்​களின் முதல் தேர்​வாக பதிவு தபால்​கள் இருக்​கின்​றன. அதாவது, பதிவு தபால் யாருக்கு அனுப்​பப்​படு​கிறதோ அவரே பெற முடி​யும் என்​பது இதன் தனிச்​சிறப்​பாகும். பாது​காப்​பான ஆவண விநி​யோகத்​துக்கு பதிவு செய்​யப்​பட்ட அஞ்​சல் நம்​பக​மான சேவை​யாக இருக்​கிறது.

இதற்​கிடை​யில், அஞ்​சல் செயல்​பாடு​களை நவீனமய​மாக்​கும் நோக்​கில், 171 ஆண்டு கால சேவை​யாக திகழும் பதிவு தபால் சேவையை செப்​.1-ம் தேதி முதல் நிறுத்​தப்பட உள்​ள​தாக​வும், விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட உள்​ள​தாக​வும் தகவல் வெளி​யானது.

அதாவது, டிஜிட்​டல் விருப்​பங்​களால், பதிவு செய்​யப்​பட்ட தபால் பயன்​பாடு குறைந்​துள்​ள​தாக​வும், மேம்​பட்ட கண்​காணிப்​பு, வேக​மான விநி​யோக நேரம் மற்​றும் சிறந்த செயல்​பாட்​டுத் திறன் கொண்ட விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கப்பட உள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது.

இந்​நிலை​யில், பதிவு தபால் சேவையை நிறுத்​தி, விரைவு தபால் சேவை​யுடன் இணைக்​கும் நடவடிக்கை அக்​.1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்​ள​தாக அஞ்​சல் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, இந்​தி​யஅஞ்​சல் துறை அண்​மை​யில் வெளி​யிட்ட ஒரு சுற்​றறிக்​கை: முகவரி சார்ந்த விநி​யோகத்​துக்​கான அடிப்​படை தபால் சேவை​யாக விரைவு தபால் கடிதம் மற்​றும் விரைவு தபால் பார்​சல் ஆகியவை இனிமேல் இருக்​கும். பதிவு தபால் என்​பது விரைவு தபால்​களுக்கு மட்​டுமே மதிப்பு கூட்​டப்​பட்ட சேவை​யாக கிடைக்​கும்.

முகவரி​தா​ரருக்கு குறிப்​பிட்ட விநி​யோகத்தை வழங்​கும். பிற வகை தபால்​களுக்கு பதிவு கிடைக்​காது. வளர்ந்து வரும் சந்தை தேவை​கள் மற்​றும் வாடிக்​கை​யாளர் எதிர்​பார்ப்​பு​களுக்கு ஏற்ப இது மாற்​றப்​பட்டு வரவுள்​ளது.

விரைவு தபால் மற்​றும் பதிவு உள்​ளிட்ட மதிப்பு கூட்​டப்​பட்ட சேவைக்​கான செயல்​பாட்டு வழி​காட்​டு​தல்​கள், பொருந்​தக்​கூடிய கட்​ட​ணங்​கள் மற்​றும் சேவை விதி​முறை​கள் அவ்​வப்​போது துறை​யால் அறிவிக்​கப்​படும். இந்த புதிய நடை​முறை அக்​.1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, அஞ்​சல் துறை அதி​காரி​கள் கூறுகை​யில்,“ப​திவு தபால் என்​பது சம்​பந்​தப்​பட்​ட​வரிடம் நேரிடை​யாக விநி​யோகிப்​பது ஆகும். விரைவு தபால் என்​பது சம்​பந்​தப்​பட்​ட​வரிடம் முகவரி​யில் இருப்​பவரிடம் கொடுத்​து​விடலாம். புதிய உத்​தரவு மூல​மாக, விரைவு தபாலில், மதிப்பு கூட்​டப்​பட்ட சேவை​யாக பதிவு தபால் வழங்​கப்பட உள்​ளது. தற்​போது, விரைவு தபாலுடன் பதிவு தபால்​ சேவை இணைப்​பது மூல​மாக, வாடிக்​கை​யாளர்​களுக்​கு ஒருங்​கிணைந்​த அஞ்​சல்​ சேவை​கள்​ கிடைக்கும்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...