சினிமாவில் ஒரே பாட்டில், ஹீரோ பெரிய கோடீஸ்வரனாகி வாழ்க்கையில் ஜெயிப்பதாக காட்டுவார்கள். அதேபோலதான் ராஷ்மிகா மந்தானாவின் சினிமா கேரியரும்,.
சினிமாவில் அறிமுகமான நாலைந்து படங்களிலேயே ‘நேஷனல் க்ரஷ்’ என கொண்டாடப்பட்டார். பாலிவுட் வாய்ப்புகள் தாமாக வந்து சேர்ந்தன.
அமிதாப் பச்சனுடன் நடித்த ‘குட் பை’, அடுத்து ’மிஷன் மஞ்சு’ இந்த இரண்டுப் படங்களும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றாலும், ராஷ்மிகாவின் மார்கெட்டை தக்க வைக்க எந்தவிதத்திலும் உதவில்லை.
இதனால் மும்பையில் செட்டிலாகும் எண்ணத்தில் இருந்த ராஷ்மிகா இப்போது பேக்கப் செய்து கொண்டு ஹைதராபாத்திற்கு திரும்பியிருக்கிறார்.
தற்போது இவர் கைவசம் ‘அனிமல்’ படம் மட்டுமே உள்ளதால், இந்தப்படத்தின் வரவேற்பைப் பொறுத்தே அல்லது கோலிவுட், டோலிவுட்டா என முடிவு செய்யவிருக்கிறாராம்.
இங்கே வாய்ப்புகளை விரட்டிப் பிடிக்க ராஷ்மிகா தனது மேனேஜர் தரப்பை களத்தில் இறக்கி விட்டிருக்கிறாராம். அதேபோல் சம்பள விஷயத்திலும் கூட ஆடித்தள்ளுபடி, இயர் என்ட் சேல், சீசன் சேல் மாதிரி சிறப்புச் சலுகைகளையும் அளிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கிறார்கள்.
#rashmikamandanna, #rashmika, #nationalcrush, #pushpa, #srivalli, #vijaydevaraconda,
ரஜினிக்கு ஜோடி இல்லை!
வாழ்க்கையில் சம்பாதித்த பணம் முக்கியம் இல்லை. ஆரோக்கியமும், மனநிம்மதியும்தான் முக்கியம். இப்படி வாழ்க்கை கற்றுக்கொடுத்த அனுபவத்தைப் பற்றி பல மேடைகளில் கர்ஜித்த ரஜினி இப்பொழுதும் உடல் நலத்தைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பல கோடி சம்பளம் வாங்கிக் கொண்டு தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.
தலைவர்170 படத்தின் அறிவிப்பு வெளியாகி விட்டது. லைகா தயாரிப்பில் ஜெம்பீம் பட இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் ரஜினிக்கு இதுவரை இல்லாத ஒரு மெச்சூர்டான கதாபாத்திரம் என்கிறார்கள். சமூகப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் ஒரு சாமானியனாக ரஜினி கதாப்பாத்திரம் இருக்கும். மேலும் ரஜினிக்கு ஜோடி என்று யாரும் இல்லை என்றும் பேச்சு அடிப்படுகிறது.
அமிதாப் பச்சன் போல வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கலாமா, அதற்கு ரசிகர்களிடம் எந்தளவிற்கு வரவேற்பு இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்தப் படம் உதவும் என ரஜினி நினைக்கிறாராம்.
#rajini, #thalaivar, #thalaivar170, #lyca, #jaibheem, #rajinikanth, #lalsalam, #superstar,
இளையராஜாவைப் புறக்கணித்ததா தெலுங்கு சினிமா?
இசையின் ராஜா இளையராஜாவின் நேரடி இசை நிகழ்ச்சி என்றால், அது நடக்குமிடத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ட்ராஃபிக்கை விட அதிக ட்ராஃபிக் நெருக்கடி இருக்கும். அந்தளவிற்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கும்.
இது காலம்காலமாக நடக்கும் தீபாவளி, பொங்கல் மாதிரியான ஒரு கொண்டாட்டம்.
சமீபத்தில் ஹைதராபாத்தில் இருக்கு கச்சிபெளவ்லி அரங்கத்தில் இளையராஜாவின் லைவ் கான்செர்ட் நடைபெற்றது. இந்த நேரடி மேடை கச்சேரிக்கு தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், வாரிசு நட்சத்திரங்கள் என பெரிய எண்ணிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டதாம்.
ஆனால் இந்நிகழ்ச்சில் சிரஞ்சீவி, நானி மட்டுமே கலந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை தவிர ஒரு சில இரண்டாம் கட்ட நட்சத்திரங்கள் மட்டுமே வந்திருக்கிறார்கள்.
சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்ட நட்சத்திரங்கள் ஹைதராபாத்தில் இருந்த போதிலும் இளையராஜா நிகழ்ச்சி வரவில்லையாம்.
தெலுங்கு சினிமாவில் இருக்கும் நட்சத்திர குடும்பங்களுக்கு எத்தனையோ ஹிட்களை கொடுத்து அவர்களது சினிமா பயணத்தில் முக்கிய பங்கு வகித்த இளையராஜாவுக்கே இப்படியொரு நிலைமையா என்று வருத்தப்படுகிறார்கள் இசை ப்ரியர்கள்.
#ilayaraja, #isaignani, #yuvan, #maestro, #ilayaraaja, #music, #tamilcinema, #musiclovers,