No menu items!

மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

மாரி செல்வராஜை பாராட்டிய ரஜினி!

“உங்களது உழைப்பும், ஆளுமையும் ஆச்சரியப்படுத்துகிறது” என ரஜினி தெரிவித்ததாக மாரி செல்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பைசன்’ படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், வசூல் ரீதியாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, இப்படத்தினை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் இருவரையும் தொலைபேசி வாயிலாக பாராட்டியிருக்கிறார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த் பாராட்டு குறித்து மாரி செல்வராஜ், “’சூப்பர் மாரி. சூப்பர். பைசன் பார்த்தேன். படத்துக்கு படம் உங்கள் உழைப்பும், உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள்’ என்று ரஜினி சார் தெரிவித்தார்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ பார்த்துவிட்டு என்னை அழைத்துப் பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்குழு சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

துருவ் விக்ரம், பசுபதி, ரஜிஷா விஜயன், அனுபா பரமேஸ்வரன், லால், அமீர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைசன்: காளமாடன்’. நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தினை தமிழகத்தில் ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...